நடுக் கற்காலம்
அகழாய்வு ஆய்வுகளின்படி, நடு கற்காலம் (Epipalaeolithic) என்பது கற்காலத்தின் பிந்தைய கற்காலத்திற்கும், இடைக் கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் ஆகும். நடு கற்காலத்தின் தொல்லியல் களங்கள் பண்டைய அண்மை கிழக்கின் லெவண்ட் மற்றும் நடுநிலக் கடலின் தற்கால ஐரோப்பியக் கடற்கரைகள், வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பியப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நடு கற்காலம் | |
---|---|
[[File:|264px|alt=]] பண்டைய அண்மை கிழக்கில் கேப்ரான் பண்பாட்டின் (Kebaran culture), நடு கற்காலத்திய கற்குழவி, காலம் கிமு 22000-18000 | |
புவியியல் பகுதி | பண்டைய அண்மை கிழக்கு |
காலப்பகுதி | பிந்தைய கற்காலத்திற்கும், இடைக் கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் |
காலம் | 20,000 - 10,000 (Before Present) |
முந்தியது | பிந்தைய கற்காலம் (லெவண்ட்) |
பிந்தியது | இடைக் கற்காலம் (ஐரோப்பா) |
பிந்தைய கற்காலத்தின் இறுதியில் மனிதத் தொழில்கள் இடைக் கற்காலத்திய தொழில்நுட்பங்களுடன் விளங்கியதே நடு கற்காலம் என வரையறை செய்யப்பட்டுள்ளது. [1] பண்டைய அண்மை கிழக்கின் லெவண்ட் பகுதியில் நடு கற்காலத்தின் காலம் 20,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் என வரையறை செய்யப்பட்டுள்ளது.[2]
இந்நடுக் கற்காலத்தை லெவண்ட் பகுதியில் துவக்க, நடு மற்றும் பிந்தைய நடுக் கற்காலம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நடுக் கற்காலத்தின் இறுதியில் லெவண்ட் பகுதியில் நத்தூபியப் பண்பாடு விளங்கியது.[3] இந்நடுக் கற்காலத்திற்கு முன்னர் பிந்தைய கற்காலத்தின் ஐந்தாம் கட்டத்திய கேப்ரான் பண்பாடு நிலவியது.[4]
நடுக் கற்காலத்திய மக்கள் பொதுவாக வேட்டைச் சமூகமாகவும், நாடோடி வாழ்க்கையும் வாழ்ந்தனர். இக்கால மக்கள் கல், உலோகம் மரக்கட்டையிலான கூரான கத்திகள், ஈட்டிகள் போன்ற கருவிகள் வேட்டையாட பயன்படுத்தினர். எளிய மற்றும் தற்காலிக அமைப்புகளுடன் கூடிய குடியிருப்புகளில் மக்கள் வாழ்ந்தனர். [5]
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ Bahn, Paul, The Penguin Archaeology Guide, Penguin, London, p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140514481
- ↑ Simmons, 46
- ↑ Simmons, 47–48
- ↑ Simmons, 47–48
- ↑ Simmons, 48–49
மேற்கோள்கள்
தொகு- Bailey, Geoff and Spikins, Penny, Mesolithic Europe, 2008, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521855039
- Simmons, Alan H., The Neolithic Revolution in the Near East: Transforming the Human Landscape, 2007, University of Arizona Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0816529667, google books
- Knut Stjerna (1910). "Les groupes de civilisation en Scandinavie à l'époque des sépultures à galerie" (in French). L'Anthropologie XXI: 1–34.