நூத்துபியப் பண்பாடு

(நத்தூபியப் பண்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நூத்துபியப் பண்பாடு ( Natufian culture (/nəˈtfiən/[1]) பண்டைய அண்மை கிழக்கின் பிந்தை நடு கற்காலத்தில் லெவண்ட் பிரதேசத்தில் தற்கால இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்தான் மற்றும் சிரியாவில் கிமு 12,000 முதல் 9,500 முடிய விளங்கிய ஒரு தொல்பொருள் பண்பாடு ஆகும்.[2][3][4] இது உலகின் முதல் பண்பாடு எனக்கருதப்படுகிறது. தற்கால எரிக்கோ நகரம் நூத்துப்பியான் பண்பாட்டு காலத்திலிருந்து தொடர்ந்து மக்கள் வாழ்ந்த பகுதிகளில் ஒன்றாகும். நூத்துப்பிய பண்பாட்டுக் களங்களில், உலகில் முதன்முதலில் வேளான்மை செய்த பகுதியாக அறியப்படுகிறது.[5] 14,500 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் முதன் முதலாக ரொட்டி தயாரிக்கும் பகுதியாக நூத்துப்பிய பண்பாட்டுக் களங்களில் ஒன்றான, ஜோர்தானின் வடகிழக்கு பாலைவனப்பகுதியில் அமைந்த சுபய்யா (Shubayqa) தொல்லியல் மேடுகளின் அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.[6] மேலும் உலகின் தொன்மையான நூத்துப்பிய பண்பாட்டின் அரை-நாடோடி மக்கள் சமயச் சடங்குகளின் போது படையலுக்குப் பயன்படுத்திய, 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய பீர் குடுவையை இஸ்ரேல் நாட்டின் கடற்கரை நகரமான ஹைபாவின் கார்மேல் மலையில் உள்ள ரக்கேபெட் குகையில் கண்டெடுக்கப்பட்து.[7][8]

நூத்தூபியப் பண்பாடு
புவியியல் பகுதிலெவண்டின் தற்கால இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்தான் மற்றும் சிரியாவில் உள்ள நூத்துப்பியப் பண்பாட்டின் தொல்லியல் களங்கள்
காலப்பகுதிநடுக் கற்காலம் (லெவண்ட்)
காலம்கிமு 13,050 – 7,550 அல்லது கிமு 12,000 – 9,500
வகை களம்சக்குபா குகை (வாடியன் நூத்துப்)
முக்கிய களங்கள்சக்குபா குகை, அயின் மல்லா, டெல் அபு, அயின் ஜெவ், டெல் அபு ஹுரெய்ரா
முந்தியதுகேப்ரான் பண்பாடு, முசாபியான் பண்பாடு
பிந்தியதுபுதிய கற்காலம்: கியாமியான், மேய்ப்போர் புதிய கற்காலம்
நரிப் பற்களால் அலங்கரிக்கப்பட்ட பெண்னின் இடுப்பெலும்பு பகுதி, நூத்துபியப் பண்பாடு, கிமு 12,500 – 9500

பொதுவாக நூத்துப்பியப் பண்பாட்டு மக்கள் காட்டுத் தானியங்களையும், காட்டுச் சிறுமான்களையும் உணவாகக் கொண்டனர்.[9] தொல்லியல் அறிஞர் ஜி. கிறிஸ்டி டர்னரின் கூற்றுப்படி, லெவண்ட் பகுதியில் வாழும் தற்கால செமித்திய மொழிகள் பேசும் மக்களுக்கும், நூத்துப்பியப் பண்பாட்டு மக்களுக்கும் தொல்லியல் மற்றும் மானிடவியல் பண்புகள் அடிப்படையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாக கருதுகிறார்.[10] (பிந்தைய புதிய கற்காலம் முதல் வெண்கலக் காலம்) வரையிலான [[[தொல்பொருளியல்]] பிற்காலத்தில் (கற்காலத்திலிருந்து வெண்கலக் காலம் வரை) லெவாண்டின்கள் முதன்மையாக நேட்டூபியர்களிடமிருந்து பெறப்பட்டவை என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

செப்புக் காலத்திய அனதோலிய மக்கள் மற்றும் லெவண்ட் மக்கள் நூத்துப்பிய பண்பாட்டின் தாக்கங்களின் கலவையுடன் விளங்கினர் என தொல்பொருள் அறிஞர்கள் கருதுகின்றனர்.[11] டோரதி காரோடு எனும் தொல்லியல் அறினர் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதேயா மலையில் உள்ள சுக்பா குகையின் அகழ்வாய்வுகளின் அடிப்படையில் நூத்துப்பியப் பண்பாடு என்ற பெயர் வழங்கப்பட்டது எனக் கூறுகிறார்.

தொல்லியல் அகழாய்வுகள்

தொகு
 
1928-இல் நூத்துப்பியப் பண்பாட்டுக் களங்களை அகழாய்வு செய்த டோரதி காரோடு (நடுவில்)

பிரித்தானிய தொல்லியல் அறிஞர் தோரதி காரட் என்பவர் ஜோர்தான் ஆற்றின் மேற்கு கரையில் உள்ள யூதேயா மலையில் உள்ள சுக்பா குகையை 1928-இல் அகழ்வாய்வு செய்த போது நூத்துப்பிய பண்பாட்டின் தொல்லியல் எச்சங்களைக் கண்டறிந்தார்.[12] பிந்தைய கற்காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்திற்குரிய இடைப்பொதியில் (sandwich) குறுனிக்கல் காலத்திற்குரிய குறிகளுடன் கண்டுபிடித்தார். பின்னர் இந்த இடப்பொதியை இடைக் கற்காலத்திற்கு உரியது என கண்டறிந்தார்.

பின்னர் அதே போன்ற இடைப்பொதிகளை எல் - வாத் டெரஸ், கார்மேல் மலை, வாடியன் நூத்துப் போன்ற தொல்லியல் களங்களில் தோரதி காரேட் கண்டுபிடித்தார். 1931-இல் தோரதி காரேட் கல் கத்தியை கண்டுபிடித்ததன் மூலம் அப்பகுதிகளில் வேளாண்மைத் தொழில் துவக்க நிலையில் இருந்ததை அறிந்தார்.

காலக் கணிப்பு

தொகு
 

கரிமக் காலக்கணிப்பின் படி பண்டைய அண்மைக் கிழக்கின் லெவண்ட் பகுதியில் நூத்துபியப் பண்பாடு கிமு 12,500 முதல் கிமு 9,500 வரை விளங்கியதாக அறியப்படுகிறது.[13]

நூத்துபியப் பண்பாட்டு காலத்தை கிமு 12,800 முதல் 10,800 வரை முதல் பகுதியாகவும், கிமு 10,800 முதல் கிமு 9,500 வரை இரண்டாம் பகுதியாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் பகுக்கின்றனர். நூத்துபியப் பண்பாட்டுக் காலத்தின் போது நிலங்கள் தற்போது இருப்பது போன்று வறண்டதாக இன்றி காடுகளுடன் செழிமையாக இருந்தது என அறியப்படுகிறது.[14]

தொடர்புடைய பண்பாடுகள்

தொகு
 
நூத்துப்பியப் பண்பாட்டுக் காலத்தில், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்திய தானியங்கள் அரைக்கும் அம்மி, உரல், குழவி மற்றும் ஆட்டுக்கற்கள்

பண்டைய அண்மை கிழக்கின் நூத்துபியப் பண்பாட்டைப் போன்று சினாய் தீபகற்பத்தில் முசாபியான் பண்பாடு மற்றும் கேப்ரான் பண்பாடு விளங்கியது.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் நூத்துப்பியப் பண்பாட்டுத் தொல்லியற் களங்களில் தானியங்கள் அரைக்கும் அம்மி, உரல், குழவி மற்றும் ஆட்டுக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகள்

தொகு
 
பெத்லகேம் அருகே அயின் சக்கிரி தொல்லியல் களத்தில் அமர்ந்த நிலையில் கலவியில் ஈடுபடும் ஆண்-பெண்ணின் சிற்பம், பிரித்தானிய அருங்காட்சியகம்
 
பண்டைய அண்மை கிழக்கின் நடு கற்காலத்திய தற்காலிக குடியிருப்புகள்
 
நூத்துப்பியப் பண்பாட்டுக் காலத்திய வீட்டின் சிதைந்த சுவர்கள்

லெபனான், இஸ்ரேல், சினாய் தீபகற்பத்தின் மலைப்பகுதிகள் மற்றும் சிரிய-அரேபியப் பாலைவனப் பகுதிகளில் நூத்துபியப் பண்பாட்டின் மக்களின் குடியிருப்புகள் காணப்பட்டது. இப்பண்பாட்டின் குடியிருப்புகளின் அடித்தளங்கள் கற்களாலும், மேற்கூரைகள் மரத்தினாலும் ஆனது. ஆனால் களிமண் செங்கற்கள் காணப்படவில்லை. எனவே இப்பண்பாட்டுக் காலம் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) என அறியப்படுகிறது.

கல்லறைகள்

தொகு
 
நூத்துபிய தொல்லியல் களத்தின் கார்மேல் மலையின் சவக்குழியில் கிடைத்த மனித எலும்புக்கூடு, ராக்பெல்லர் அருங்காட்சியகம்
 
துவக்க நூத்துபியப் பண்பாட்டுக் காலத்திய மனித உருவில் வைக்கப்பட்ட கற்கள், காலம் கிமு 12,000

நூத்துப்பியக் கல்லறைகளில் சங்குகள், செம்மானின் பற்கள், எலும்புகள், காது வளையங்கள், இடுப்பணிகள், கழுத்தணிகள் மற்றும் வித்தியாசமான கற்கள் கிடைத்துள்ளது.

2008-இல் வடக்கு இஸ்ரேலின் ஹிலசான் டாச்தித் எனும் குகையில் கிமு 12,400 - 12,000 இடைப்பட்ட காலத்திய நூத்துபியப் பண்பாட்டின் சவக்குழியில் மந்திரம் மற்றும் மருத்துவம் செய்த பெண்னின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது.[15] [16][17] மேலும் இச்சவக்குழியின் பெண் எலும்புக் கூடு அருகே 3 எருமைகள், 86 ஆமைகள், சிறுத்தை மற்றும் கழுகுகளின் எலும்புக்கூடுகள் இருந்தது.[18][19]

தொல்லியல் எச்சங்கள்

தொகு
 
நூத்துப்பிய காலத்திய அம்மியும் குழவியும், கிமு 12,500 - 9500
 
தானியம் அரைக்கும் கற் கருவிகள்
 
எரிமலை குழம்புக் கற்கள்

நூத்துப்பிய பண்பாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து வேட்டையாடும் சமூகமாக வாழ்ந்தனர். காட்டுத் தானியங்களை சேகரித்து உண்டனர். இம்மக்கள் சிறப்பு உணவாக சிறுமான்கள் இருந்தமைக்கு சான்றுகள் கிடைத்துள்ளது. மேலும் ஜோர்தான் சமவெளியின் புல்வெளிப் பகுதிகளில் எருதுகள், காட்டுப் பன்றிகளை வேட்டையாடினர்.[20]

நூத்துபிய பண்பாட்டின் மொழி

தொகு
 
நூத்துப்பிய பண்பாட்டுக் காலத்திய சுண்ணாம்புக் கல் மற்றும் எரிமலைக் கற்களாலான பாண்டங்கள் (கிமு 12,000) அயினான் தொல்லியல் களம்

நூத்துபிய மக்கள் வட ஆப்பிரிக்க - ஆசிய மொழிகளின் கலவையான மொழியை பேசினர் என தொல்லியல் அறிஞர் விட்டலி செவொரொஸ்கின் கருதுகிறார்.[21]

அலெக்சாண்டர் மிலிதரேவ் என்பவர் நூத்துபிய மக்கள் ஆதி ஆப்பிரிக்க-ஆசிய மொழியைப் பேசினர் எனக்கருதுகிறார்.[22][23]

நூத்துபியப் பண்பாட்டின் தொல்லியல் களங்கள்

தொகு
  • சிரியா: டெல் அபு ஹுரெய்ரா (Tell Abu Hureyra), முரெய்பெத் (Tell Abu Hureyra), டெல் அஸ்வத், டெல் குவாராமி
  • இஸ்ரேல்:அயின் மல்லாகா, எல்-வாத், கேப்ரா குகை
  • மேற்கு கரை: சுக்பா குகை, எரிக்கோ
  • ஜோர்தான்: பெய்தா, இராக் எத் - துப்
  • லெபனான்: ஜெய்தா, பெய்ரூட், ஜபல் எஸ் சைதே, ஆம்மிக்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Natufian". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  2. Edwards, Phillip C. (2012-11-23). Wadi Hammeh 27, an Early Natufian Settlement at Pella in Jordan (in ஆங்கிலம்). BRILL. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004236097.
  3. García-Puchol, Oreto; Salazar-García, Domingo C. (2017-07-01). Times of Neolithic Transition along the Western Mediterranean (in ஆங்கிலம்). Springer. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319529394.
  4. Grosman, Leore; Munro, Natalie; Belfer-Cohen, Anna (2008-12-01). "A 12,000-year-old Shaman Burial from the Southern Levant (Israel)". Proceedings of the National Academy of Sciences of the United States of America 105 (46): 17665–9. doi:10.1073/pnas.0806030105. பப்மெட்:18981412. பப்மெட் சென்ட்ரல்:2584673. https://www.researchgate.net/publication/23448783. 
  5. Moore, Andrew M. T.; Hillman, Gordon C.; Legge, Anthony J. (2000), Village on the Euphrates: From Foraging to Farming at Abu Hureyra, Oxford: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-510806-4
  6. "Prehistoric bake-off: Scientists discover oldest evidence of bread". BBC. 17 July 2018. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.
  7. "'World's oldest brewery' found in cave in Israel, say researchers". British Broadcasting Corporation. 15 September 2018. பார்க்கப்பட்ட நாள் 15 September 2018.
  8. "'13,000-year-old brewery discovered in Israel, the oldest in the world". The Times of Israel. 12 September 2018. https://www.timesofisrael.com/13000-year-old-brewery-discovered-in-israel-the-oldest-in-the-world/. பார்த்த நாள்: 16 September 2018. 
  9. Kottak, Conrad P. (2005), Window on Humanity: A Concise Introduction to Anthropology, Boston: McGraw-Hill, pp. 155–156, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-289028-0
  10. John D. Bengtson (2008-12-03). In Hot Pursuit of Language in Prehistory: Essays in the four fields of anthropology. In honor of Harold Crane Fleming. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789027289858. Since there is archaeological and physical anthropological reason to believe that the Natufians were related to modern Semitic-speaking peoples of the Levant, I suggest that some part, if not all of, the Afro-Asiatic family originated north of Africa porper. Since Natufian culture dates to ca. 10,000 to 12,000 years ago it is suggested that the age of the AfroAsiaic language family might also be about that old.
  11. Lazaridis, Iosif; Nadel, Dani; Rollefson, Gary; Merrett, Deborah C.; Rohland, Nadin; Mallick, Swapan; Fernandes, Daniel; Novak, Mario et al. (2016). "Genomic insights into the origin of farming in the ancient Near East". Nature 536 (7617): 419–424. doi:10.1038/nature19310. பப்மெட்:27459054. பப்மெட் சென்ட்ரல்:5003663. Bibcode: 2016Natur.536..419L. http://genetics.med.harvard.edu/reichlab/Reich_Lab/Publications_files/nature19310-s4.pdf.  Fig. 4. "Our data document continuity across the transition between hunter– gatherers and farmers, separately in the southern Levant and in the southern Caucasus–Iran highlands. The qualitative evidence for this is that PCA, ADMIXTURE, and outgroup f3 analysis cluster Levantine hunter–gatherers (Natufians) with Levantine farmers, and Iranian and CHG with Iranian farmers (Fig. 1b and Extended Data Figs 1, 3). We confirm this in the Levant by showing that its early farmers share significantly more alleles with Natufians than with the early farmers of Iran" Epipaleolithic Natufians were substantially derived from the Basal Eurasian lineage. "We used qpAdm (ref. 7) to estimate Basal Eurasian ancestry in each Test population. We obtained the highest estimates in the earliest populations from both Iran (66±13% in the likely Mesolithic sample, 48±6% in Neolithic samples), and the Levant (44±8% in Epipalaeolithic Natufians) (Fig. 2), showing that Basal Eurasian ancestry was widespread across the ancient Near East. [...] The idea of Natufians as a vector for the movement of Basal Eurasian ancestry into the Near East is also not supported by our data, as the Basal Eurasian ancestry in the Natufians (44±8%) is consistent with stemming from the same population as that in the Neolithic and Mesolithic populations of Iran, and is not greater than in those populations (Supplementary Information, section 4). Further insight into the origins and legacy of the Natufians could come from comparison to Natufians from additional sites, and to ancient DNA from North Africa."
  12. Boyd, Brian (1999). "'Twisting the kaleidoscope': Dorothy Garrod and the 'Natufian Culture'". In Davies, William; Charles, Ruth (eds.). Dorothy Garrod and the progress of the Palaeolithic. Oxford: Oxbow. pp. 209–223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781785705199.
  13. Munro, Natalie D. (2003), "Small game, the Younger Dryas, and the transition to agriculture in the southern Levant" (PDF), Mitteilungen der Gesellschaft für Urgeschichte, 12: 47–71, archived from the original (PDF) on 2020-06-02
  14. Bar-Yosef, Ofer (1998), "The Natufian Culture in the Levant, Threshold to the Origins of Agriculture" (PDF), Evolutionary Anthropology, 6 (5): 159–177, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/(SICI)1520-6505(1998)6:5<159::AID-EVAN4>3.0.CO;2-7
  15. Grosman, L.; Munro, N. D.; Belfer-Cohen, A. (2008). "A 12,000-year-old Shaman burial from the southern Levant (Israel)". Proceedings of the National Academy of Sciences 105 (46): 17665–17669. doi:10.1073/pnas.0806030105. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. 
  16. "Oldest Shaman Grave Found". National Geographic 04-Nov-2008
  17. "Archaeologists discover 12,000 year-old grave of witch doctor". Daily Mail 04-Nov-2008
  18. "Hebrew U. unearths 12,000-year-old skeleton of 'petite' Natufian priestess". By Bradley Burston. Haaretz, 05-Nov-2008
  19. Hogenboom, Melissa (24 May 2016), Secrets of the world's oldest funeral feast, earth, BBC, பார்க்கப்பட்ட நாள் 24 May 2016
  20. Mithen, Steven (2006). After the Ice: A Global Human History, 20,000-5000 BC (in ஆங்கிலம்). Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674019997.
  21. Winfried Nöth (1994). Origins of Semiosis: Sign Evolution in Nature and Culture. p. 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783110877502.
  22. Roger Blench, Matthew Spriggs (2003). Archaeology and Language IV: Language Change and Cultural Transformation. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134816231.
  23. John A. Hall, I. C. Jarvie (2005). Transition to Modernity: Essays on Power, Wealth and Belief. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521022279.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Natufian
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நூத்துபியப்_பண்பாடு&oldid=4060922" இலிருந்து மீள்விக்கப்பட்டது