நந்தனா (நடிகை)

இந்திய நடிகை

நந்தனா ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் 2000 களில் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்கள் மற்றும் துணை வேடங்களில் நடித்தார். இவர் 2002 இல் வெளியான மலையாள மலையாளத் திரைப்படமான சிநேகிதன் மூலம் அறிமுகமானார்.

நந்தனா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2002–2006
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்ஆர்த்திகா
மதிவதனி
உறவினர்கள்பாரதிராஜா
(மாமனார்)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திருவண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் 19 நவம்பர் 2006 அன்று தமிழ் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜாவை மணந்தார். சாதுர்யன் என்ற திரைப்படத்தில் மனோஜுடன் இணைந்து நடித்தார் நந்தானா. திருமணத்திற்குப் பிறகு சினிமா துறையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர்களுக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதனி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

திரைப்படத்துறை

தொகு

இவர் 2002 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படமான சிநேகிதன் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார்.2023 இல் தமிழில் வெளியான சக்சஸ் என்ற திரைப்படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ஏபிசிடி, கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படங்கள் மொழி குறிப்புகள்
2002 சிநேகிதன் மலையாளம்
2003 சுவப்ணம் கொண்டு துலாபாரம் மலையாளம்
2003 சக்சஸ் தமிழ்
2004 செதுராம ஐயர் சிபிஐ மலையாளம்
2004 சதிக்காத சந்து மலையாளம்
2005 கல்யாணகக்குறிமானம் மலையாளம்
2005 சாதுரியன் தமிழ்
2005 ஏபிசிடி தமிழ்
2006 கலிங்கா தமிழ்

விளம்பரம்

தொகு
  • சிறீதேவி டெகஸ்டைல்ஸ்

மேற்கோள்கள்

தொகு
  1. "பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் இடையேதிருமணம் நடைபெறுவது உறுதியாகி விட்டது". Filmibeat. 2004-02-05. பார்க்கப்பட்ட நாள் 2024-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தனா_(நடிகை)&oldid=4114198" இலிருந்து மீள்விக்கப்பட்டது