நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி , என்பது ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1] இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுப்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையால்[2] 2000 ஆண்டில் தொடங்கப்பட்டது.

நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்2000
முதல்வர்மா. கோபாலகிருஷ்ணன்
மாணவர்கள்3500
அமைவிடம், ,
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அறிமுகம் தொகு

இக்கல்லூரி ஈரோடு மாவட்டம் ஈரோட்டில் அமைந்துள்ளது. இக்கல்லூரி தரமான கல்வி மற்றும் வேலைவாய்பிற்கான திறனூக்கப் பயிற்சி என்னும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் 23 இளநிலைப் படிப்புகளும், 13 முதுநிலைப் பாடப் பிரிவுகளும் உள்ளது. 2018 ஆண்டு அடிப்படையில் இக்கல்லூரியில் 132 ஆசிரியர்களும், 27 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் இருக்கின்றனர். மேலும் இந்த ஆண்டு காலகட்டத்தில் இக் கல்லூரியில் 3500க்கும் மேற்பட்ட இருபால் மாணவர்கள் பயில்கின்றனர். இக்கல்லூரியில் ஏழு துறைகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சிப்படிப்பகள் வழங்கப்படுகிறன.

சான்றுகள் தொகு

  1. "ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா". செய்தி. தினகரன். 19 மே 2017. Archived from the original on 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
  2. "நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் தேசியத் தர மதிப்பீடு குழு ஆய்வு". செய்தி. தினமணி. 21 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |date= (help)