நந்தா ஜிச்கர்
நந்தா ஜிச்கர் (Nanda Jichkar)(பிறப்பு 1 பிப்ரவரி 1964) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1]
நந்தா ஜிச்கர் | |
---|---|
மாநகரத் தந்தை-நாக்பூர் | |
பதவியில் 5 மார்சு 2017 – 22 நவம்பர் 2019 | |
முன்னையவர் | பிரவீன் தத்கே |
பின்னவர் | சந்தீப் ஜோசி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 1, 1964 நாக்பூர் |
தேசியம் | இந்தியர் |
வேலை | அரசியல்வாதி |
பின்னணி
தொகுஜிச்கர் நாக்பூரில் உள்ள கர்னல் பாக்கில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1 பிப்ரவரி 1964 அன்று பிறந்தார்.[1] இவர் முதுநிலை அறிவியல் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினை புள்ளியியல் துறையில் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1] ஜிக்சர் கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டயப் படிப்பையும் பயின்றுள்ளார்.[சான்று தேவை] மேலும் இளங்கலை கல்வியியல்[1] மற்றும் முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார்.[2]
வகித்த பதவிகள்
தொகுநாக்பூர் மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இரண்டு முறை நகர்மன்ற உறுப்பினராக இருந்த ஜிச்கர், பாரதிய ஜனதா கட்சியின் நாக்பூர் மகளிர் பிரிவின் தலைவராக இரண்டு முறை பணியாற்றினார். இவர் மார்ச் 2017 முதல் நவம்பர் 2019 வரை நாக்பூர் மாநகராட்சியின் மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார்.[3] இவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினராக இருந்தார். இவர் மகாராட்டிர மாநில மாநகரத் தந்தை குழுவின் துணைத் தலைவராகவும் உள்ளார்.[4][5][6][7][8][9][10] ஜிச்கர் காலநிலை நடவடிக்கைக்கான மாநகரத் தந்தைகளின் உலகளாவிய உடன்படிக்கையில் குழு உறுப்பினராக பணியாற்றினார்.[11] மைக்கேல் ப்ளூம்பெர்க் இக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார். இவர் தற்போது நிலைத்தன்மைக்கான உள்ளூர் அரசாங்கங்களின் தெற்காசியாவிற்கான பிராந்திய செயற்குழுவின் துணைத் தலைவராகவும் உள்ளார்.[12]
நேஷனல் ஜியோகிராபிக் மூலம் உலகம் முழுவதும் உள்ள 25 பெண் தலைவர்களில் வரிசையில் ஜிச்கர் குறிப்பிடப்பட்டுள்ளார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Mathur, Barkha (March 6, 2017). "Nanda Jichkar combines family ties with social commitment". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
- ↑ "Education is like meditation for me". The Times of India (in ஆங்கிலம்). September 10, 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-09-01.
- ↑ "Nanda Jichkar satisfied with tenure as Mayor". www.thehitavada.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
- ↑ "Jichkar is VP of state mayors' council". The Times of India (in ஆங்கிலம்). August 27, 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
- ↑ "Mayor invites innovative ideas from schools, colleges". The Times of India (in ஆங்கிலம்). January 16, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
- ↑ "Mayor Innovation Award is helpful for bringing change: Jichkar". www.nagpurtoday.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
- ↑ Nanda Jichkar at GCAS (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-08-12
- ↑ "NMC to implement students' innovative ideas for Nagpur's development". Nation Next (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-02-06. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 9.0 9.1 Anparthi, Anjaya (July 12, 209). "National Geographic mentions Jichkar among 25 women world leaders". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-13.
- ↑ "25 places where women are in charge". Travel. 2019-03-05. Archived from the original on 6 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13.
- ↑ "South Asia". Global Covenant of Mayors (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
- ↑ "REXCom | ICLEI South Asia". southasia.iclei.org. Archived from the original on 22 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.