நந்தினி ஜம்மி

ஒரு அமெரிக்க ஆர்வலர் மற்றும் விளம்பர நிறுவனங்களின் பாதுகாப்பு ஆலோசகர்

நந்தினி ஜம்மி ( Nandini Jammi ) (பிறப்பு 1988 அல்லது 1989 [1] ) ஒரு அமெரிக்க ஆர்வலரும் மற்றும் விளம்பர நிறுவனங்களின் பாதுகாப்பு ஆலோசகரும் ஆவார். இவர் செக் மை ஆட்ஸ் என்ற லாப நோக்கற்ற நிறுவனத்தை சந்தையாளர் கிளாரி அட்கின் என்பவருடன் இணைந்து நிறுவினார்

நந்தினி ஜம்மி
2020 இல் நந்தினி ஜம்மி
பிறப்பு1988/1989 (அகவை 34–35)[1]
ஐதராபாத்து
பணிஅமெரிக்க ஆர்வலரும் மற்றும் விளம்பர நிறுவனங்களின் பாதுகாப்பு ஆலோசகர்
அறியப்படுவதுசெக் மை ஆட்ஸ் , ஸ்லீப்பிங் ஜெயண்ட்ஸ்

. முன்னதாக, இவர் சமூக ஊடகச் செயல்பாடு அமைப்பான ஸ்லீப்பிங் ஜெயண்ட்ஸ் என்ற நிறுவனத்தை இணைந்து நிறுவினார். [2] தவறான தகவல் அல்லது சதி கோட்பாடுகளை வெளியிடும் வலைத்தளங்கள் அல்லது விளம்பர மோசடியில் ஈடுபடும் இணையதளங்கள் என்று இவர் விவரிக்கும் பழமைவாத வலைத்தளங்களில் தோன்றும் அவர்களின் விளம்பரங்களைப் பற்றி இவர் வணிக நிறுவனங்களுக்குத் தெரிவிக்கிறார். மேலும் அந்த வெளியீட்டாளர்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு அவர்களுக்கு அழுத்தமும் கொடுக்கிறார். [3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

நந்தினி ஜம்மியின் குடும்பம் இவரது சிறுவயதிலேயே இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. இவர், வாசிங்டன், டி.சி.யின் புறநகர்ப் பகுதிகளில் வளர்ந்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த தெலுங்குக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் , மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கல்லூரியில் பயின்றார். அங்கு இவர் தி டயமண்ட்பேக் என்ற கல்லூரி செய்தித்தாளில் பங்களித்தார்.[2]

தொழில் மற்றும் செயல்பாடு தொகு

நந்தினி ஜம்மி சந்தைப்படுத்தல் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஐரோப்பாவில் இணைய தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்துபவாராக பணிபுரிந்தார். பின்னர் இவர் ஐக்கிய இராச்சியத்தை களமாகக் கொண்ட மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் நேரடி சந்தைப்படுத்துதலுக்கு பொறுப்பேற்றார். [2] பின்னர் இவர் சந்தைப்படுத்தல் துறையில் தனையாக இயங்கக்கூடிய ஆலோசகராக ஆனார் . இவர், பெர்லினில் வசித்து வந்தார்.

போலிச் செய்திகள், தீவிர வலதுசாரி உள்ளடக்கம், மருத்துவத் தவறான தகவல்கள் மற்றும் சதி கோட்பாடுகளை வெளியிடுபவர்களை விளம்பரப்படுத்துவதைச் சார்ந்து தனது செயல்பாடு மற்றும் ஆராய்ச்சியைத் தொடர, சந்தையாளர் கிளாரி அட்கினுடன் சேர்ந்து பணியாற்றினார்.[3] ஜனவரி 2020 இல், இவர்கள் விளம்பரத் தொழில்நுட்பம் மற்றும் அவர்களின் அடையாளம் காணும் சிக்கல்கள் பற்றிய தங்கள் ஆராய்ச்சியை விவரிக்கும் செய்திமடலான பிராண்டின் முதல் இதழை வெளியிட்டனர். ஜூன் 2020 இல், ஜம்மி மற்றும் அட்கின் இணைந்து செக் மை ஆட்ஸ் என்ற ஆலோசனை நிறுவனத்தை நிறுவினர். [4] அக்டோபர் 2021 இல், இவர்கள் செக் மை ஆட்ஸ் நிறுவனத்தை இணைந்து நிறுவினர். இது விசாரணை ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும் ஒரு இலாப நோக்கற்ற குழுவாகும். இருவரும் ஆலோசனை நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றினார்கள், அதே நேரத்தில் இலாப நோக்கற்ற நிறுவனத்திலும் பணியாற்றினார்கள். [5]

பிற செயல்பாடுகள் தொகு

2021 ஆம் ஆண்டில், இவரும் மற்றவர்களும், பத்திரிக்கையாளர் ஆண்டி என்கோ என்பவர் பணிபுரிந்த தி போஸ்ட் மில்லினியல் என்ற ஒரு பழமைவாத அமெரிக்க பழமைவாத இணையதள செய்தி இதழில் தங்களது விளம்பரங்களை நிறுத்துமாறு நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். [6] [7]

அக்டோபர் 2021 இல் தொடங்கப்பட்ட மற்றும் தாரா மெக்குவன் தலைமையிலான பொது-பயன் நிறுவனமான குட் மார்னிங் இன்க் என்ற நிறுவ்னத்தின் ஆலோசனைக் குழுவில் ஜம்மி உள்ளார். நிறுவனம் புதிய ஊடக நிறுவனங்களுக்கு நிதியளிப்பதையும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. [8]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Maheshwari, Sapna (July 20, 2018). "Revealed: The People Behind an Anti-Breitbart Twitter Account" (in en-US). https://www.nytimes.com/2018/07/20/business/media/sleeping-giants-breitbart-twitter.html. 
  2. 2.0 2.1 2.2 Edelman, Gilad (August 13, 2020). "She Helped Wreck the News Business. Here's Her Plan to Fix It". Wired (in அமெரிக்க ஆங்கிலம்). ISSN 1059-1028. பார்க்கப்பட்ட நாள் November 5, 2021.
  3. 3.0 3.1 Lundstrom, Kathryn (August 13, 2020). "Sleeping Giants Co-Founder Launches Check My Ads" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் November 5, 2021.
  4. Lundstrom, Kathryn (August 13, 2020). "Sleeping Giants Co-Founder Launches Check My Ads" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் November 5, 2021.
  5. Barwick, Ryan (October 27, 2021). "Disinformation and ad-tech activists Check My Ads are starting a nonprofit" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் November 5, 2021.
  6. Goforth, Claire (September 16, 2021). "The Post Millennial is hemorrhaging advertisers because it employs Andy Ngo" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் November 6, 2021.
  7. Goforth, Claire (October 1, 2021). "Advertisers keep dropping the Post Millennial for employing Andy Ngo" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் November 6, 2021.
  8. Fischer, Sara (October 26, 2021). "Exclusive: Billionaires back new media firm to combat disinformation". பார்க்கப்பட்ட நாள் November 5, 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_ஜம்மி&oldid=3940028" இலிருந்து மீள்விக்கப்பட்டது