நந்தினி நிம்ப்கர்
நந்தினி நிம்ப்கர் ( Nandini Nimbkar ) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வேளாண்மை விஞ்ஞானியாவார். தற்போது "நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின்" (NARI) தலைவராக உள்ளார். பி.வி.நிம்ப்கரின் மகளும் ஐராவதி கார்வே மற்றும் கமலா நிம்ப்கரின் பேத்தியும் ஆவார்.
நந்தினி நிம்ப்கர் | |
---|---|
நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1990 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தஸ்கான், அரிசோனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வாழிடம் | பால்தான் |
முன்னாள் கல்லூரி | புளோரிடா பல்கலைக்கழகம் புனே பல்கலைக்கழகம் |
தொழில் | தலைவர் |
நந்தினி, ஒரு ஆராய்ச்சியாளராக நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் நிறுவனத்தின் இயக்குநராகவும் பின்னர் 1990 இல் நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார். வேளாண் ஆராய்ச்சியில் 37 வருட அனுபவமுள்ளவர். மேலும் சிவாஜி பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவிலும், கல்விக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். நிம்ப்கர் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு பெரிய இனிப்பு சோளம் வளர்ப்பு திட்டத்தின் அமைப்பை மேற்பார்வையிட்டார். சமீபத்தில் இந்திய அரசின் வேளாண்மைத் துறை அமைச்சகத்தால் பாராமதி, தேசிய அபியோடிக் அழுத்த மேலாண்மைத் திட்டத்தில்[1] ஆராய்ச்சி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.
கல்வி
தொகு- 1974 இல் புனே பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம்.
- 1977 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் முதுகலைப் பட்டம்.
- 1981 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றார்.
- 1997 இல் புளோரிடா பல்கலைக்கழகத்தின் மிகவும் புகழ்பெற்ற 47 முன்னாள் மாணவர்களில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார்.[2]
சான்றுகள்
தொகு- ↑ "Home". niam.res.in. Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2023-03-19.
- ↑ UF Honors 47 Alumnae during Coeducation 50th Anniversary Celebrations[தொடர்பிழந்த இணைப்பு]