நந்தினி மாதா
நந்தினி மாதா என்பவர், ஒரு இந்து பெண் தெய்வமாவார். ''துர்க்கை'' என்ற (சில நேரங்களில் நந்தினி என்றும் எழுதப்படும்) தெய்வத்தின் மற்றொரு வடிவமாகக் கருதப்படும், இவரின் பெயருக்கு "மகள்" என்று பொருள்படும்.[1]
நந்தினி மாதா | |
---|---|
கோயில் தகவல்கள் |
நந்தினி மாதா, வாகடி மொழியில் நந்தோர் மா என்றும் அழைக்கப்படுகிறார். பண்டைய இந்து புராணங்களின் படி, துவபார யுகத்தில் , நந்தினி மாதா யசோதாயின் மகளாவார், இவரே கம்சனைக் கொன்றதாகக் கூறி நவராத்திரி திருவிழாவில் வணங்கப்படுகிறார். நந்தினி மாதா பல வேத பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் துர்கா சப்தமி என்ற புத்தகத்தின் பதினோராவது அத்தியாயத்திலும் இவரது பண்புகள், குணாதிசயங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களில் இவரை யசோதாவின் மகளாக தொடர்புபடுத்தி பாடியுள்ளனர்[2]
குஜராத்தின் வாகட் பகுதியில் இவருக்கு அமைக்கப்படுள்ள கோவில், மகாகாளி பாவகத் என்றும் இங்கேயே இந்த நந்தினி மாதா வசிப்பதாகக் கருதப்படுகிறார். "கர்பா" என்று அழைக்கப்படும் ஒரு ஆதிவாசி நாட்டுப்புற நடனம் இந்த நந்தினி மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வாகத்தில் உள்ள இந்துக்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்களால் என அனைத்து பிரிவினராலும் இத்தெய்வம் சமமாக மதிக்கப்படுகிறது.
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நந்தினி மாதா கோயில் என்பதும் மிகவும் பிரபலமானதாகும். இது பரோடியா நகருக்கு அருகே மாநில நெடுஞ்சாலையில் 15 கி. மீ தொலைவில் அமைந்துள்ள பன்ஸ்வாராவில் உள்ளது.
வாகட்டில் உள்ள பரோடியா கிராமத்திற்கு அருகிலுள்ள மலைகளின் உச்சியில் பல்வேறு முக்கிய கோயில்களும் அமைந்துள்ளது. பல புராணங்களும் சடங்குகளும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்குள்ள கருப்பு கல் சிலையை மையமாகக் கொண்டுள்ளன, பின்னர் அது இடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது, தற்போது புதிய அழகான நந்தினி சிலை வடிவமைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.