நந்தீஸ்வரர் கோயில்
நந்தீஸ்வரர் கோயில் (Nandeeswarar Temple) சென்னையில் ஆதம்பாக்கத்தில் (கருணேகர் தெருவுக்கு வெளியே) அமைந்துள்ளது. இது செயின்ட் தாமஸ் மவுண்ட் புறநகர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. இந்த கோவிலுக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று கிழக்கிலும், மற்றொன்று தெற்கிலும் உள்ளன. பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் தெற்கு நுழைவாயிலுக்கு வெளியே ஒரு தொட்டி உள்ளது.
உள்ளூர் மக்களால் இக்கோயில், சிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் பிரதான தெய்வம் ஸ்ரீ நந்தீஸ்வரர் மற்றும் தேவி ஸ்ரீ அவுதாய் நாயகி (சமஸ்கிருதத்தில் கோமதி).
தெய்வங்கள்
தொகுஇறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, இக்கோயிலின் பிரதான தெய்வம் நந்தி. தனது பக்தரான பிருங்கி முனிவரின் முன் நிற்கும் வடிவத்தில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், நாகதேவதாய், விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், பிரம்மா, துர்கா, சண்டிகேஸ்வரர் மற்றும் நவகிரகங்களுக்கு தனி வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. நந்தீஸ்வரர் (சிவலிங்கம்) சிலை கிழக்கு நோக்கியும், அவுதாயநாயகி தெய்வம் தெற்கேயும் உள்ளது. வில்வமரம் இக்கோயிலின் தலவிருட்சமாகும்.
சிறப்பு பூஜைகள்
தொகுபிரதோசம், சிவராத்திரி மற்றும் சோமவார (திங்கள்) நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இங்கே ஆருத்ர தரிசனம் மற்றொரு பிரபலமான மத நிகழ்வாகும். மற்ற சிறப்பு பூஜைகள் சுப்பிரமணியர் மற்றும் விநாயகருக்கு குறிப்பிடத்தக்க நாட்களில் நடைபெறும்.
வரலாறு
தொகுஇந்த கோயிலுக்கு ஏராளமான புராணங்களும் உள்ளன. உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் இந்த கோயிலை அதானி எனும் (எனவே ஆதம்பாக்கம் என்று பெயர்) சோழனால் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர், ஆனால் இந்த கோவில் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது. நந்தி (புனித காளை) வடிவத்தில், சிவன் பிரிங்கி மகரிஷி முன் தோன்றினார். (எனவே மற்ற கோவில்களில் போல் அல்லாமல், சிவபெருமானுக்கு பூஜை செய்த பின்னே நந்திக்கு பூஜை செய்யப்படுகிறது).எனவே சிவபெருமானின் பெயர் நந்தீஸ்வரர்.பிருங்கி முனிவர் தனது கலசத்தை சில இடங்களில் வைத்திருந்து பூஜை செய்தார், எனவே அருகிலுள்ள இடம் கிண்டி என்று அழைக்கப்படுகிறது !! .[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Temple fest at Adambakkam" (in en-IN). The Hindu. 2014-03-30. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/temple-fest-at-adambakkam/article5849476.ece.