பிருங்கி முனிவர்

இந்து துறவி

பிருங்கி முனிவர் (Bhringi) தமிழர் தொன்மவியல் அடிப்படையில் பெரும் சிவபக்தரும் முனிவரும் ஆவார். இவர் சிவபெருமானை மட்டும் வணங்கும் குணமுடையவர் என்றும், அதனால் உமையம்மை கோபம் கொண்டு அவருடைய சதைப்பகுதியையெல்லாம் பிரித்து எடுத்தார். சிவபெருமான் அருளால் முனிவருக்கு தடியும் கால்களும் கிடைத்தன என்று தொன்மக் கதை கூறுகிறது.

பிருங்கி
பிருங்கியின் சிற்பம்
வகைரிஷி, சைவ சமயம்
நூல்கள்புராணம்
நடராசரை வழிபடும் பிருங்கி (இடது).
பிருங்கி முனிவரை சித்தரிக்கும் ஓவியம்

பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டுமே வணங்கியதால் உமையம்மை சிவபெருமானின் இடப்புறத்தில் இடம்பெற்றார். சிவபெருமானும் உமையம்மையும் பாதியுருவமாக இருப்பது மாதொருபாகன் என்ற அர்த்தநாரீசுவரர் மூர்த்தமாகும்.

தொன்மம் தொகு

பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் தீவிரபக்தர். இறைவி இதனால் தவம் செய்து அர்த்தநாரீ வடிவம் பெற்ற போதும் பிருங்க்கி முனிவர் இறைவியையும் சேர்த்து வழிபட விரும்பாது, வண்டு வடிவத்திலே இறைவன் பகுதியைத் துளைத்துத் தனிப்படுத்தி வழிபட்டாராம். இதனால் கோபமடைந்த இறைவி அவரை வலுவிழந்து போகும்படி சாபமிட்டனர். சாபத்தினால் வலுவிழந்து கொண்டு வந்த போதும் பிருங்கி முனிவர் தன்னிலையில் இருந்து மாறவில்லை. நடக்க முடியாத கட்டத்தினை அடைந்தார். சிவன் தன் பக்தனின் நிலை கண்டு இரங்கி அவருக்கு மூன்றாவது காலை அருளினார். இதனால் பிருங்கி முனிவர் மூன்று கால், மூன்று கையுடன் அமைக்கப்படுவதுண்டு.[1]

கோயில்கள் தொகு

பிருங்கி மலை தொகு

சிவபெருமான் பிருங்கி முனிவரை பூலோகத்தில் தவமிருக்கும் படி கூறினார். அதன் படி பிருங்கி முனிவர் தவமிருந்த மலையானது பிருங்கி மலையென்று அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் பரங்கிமலை என்றழைக்கப்படும் இம்மலையானது இன்றைய சென்னையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.[2] இத்தலத்தில் சிவபெருமான் நந்தி வடிவில் காட்சி தருகிறார். பரங்கிமலை இரயிலடியில் நந்தீசுவரர் கோயில் அமைக்கப்படுகிறது.

திருச்செங்கோடு தொகு

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பிருங்கி முனிவருக்கென சிறப்பு வழிபாடு உள்ளது. அர்த்தநாரீசுவரர் தொன்மத்துடன் பிருங்கி முனிவருக்கு தொடர்பு உள்ளாதால், இச்சிவாலயத்தில் பிருங்கி முனிவரின் உற்சவர் சிலை வழிபாடு செய்யப்படுகிறது.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்களும் ஆதாரங்களும் தொகு

  1. பூலோகசிங்கம், பொ., இந்துக்கலைக்களஞ்சியம், கொழும்பு, இலங்கை, 1990
  2. Krupa, Lakshmi (22 August 2013). "What's in a name?". The Hindu (Chennai: Kasturi & Sons). https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/whats-in-a-name/article5048779.ece. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருங்கி_முனிவர்&oldid=3786672" இலிருந்து மீள்விக்கப்பட்டது