அர்த்தநாரீசுவரர்

சிவ வடிவங்களில் ஒன்றான
அர்த்தநாரீசுவரர்
அர்த்தநாரீசுவரர் ஓவியம்
அர்த்தநாரீசுவரர் ஓவியம்
வேறு பெயர்(கள்): உமையொரு பங்கன்,மங்கையொரு பாகன், மாதொரு பாகன்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: வேடுவக் கோலம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்
11ம் நூற்றாண்டு சோழ காலச் சிற்பம். அர்த்தநாரீசுவர வடிவில் சிவனும் பார்வதியும்
அர்த்தநாரீசுவரர், புதுமண்டபம், மதுரை

அர்த்தநாரீசுவரர் (Ardhanarishvara) சிவபெருமானின் உருவ திருமேனிகளில் ஒன்றாகும். சைவ சமயத்தவர்கள் வழிபடும் உருவ திருமேனிகளில் அர்த்தநாரிசுவரர் சிறப்பிடம் பெறுகின்றது. தேவார பதிகங்களிலும் அர்த்தநாரீஸ்வரரை "வேயுறு தோளி பங்கன்" எனவும் "வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவனர்" எனவும் குறிப்பிடுகின்றனர்.

சொல்லிலக்கணம்

தொகு

அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும், பெண் கூறு இடப்பக்கமும் அமைகின்றது. சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவாகும்.

பெயர்கள்

தொகு

அர்த்தநாரிசுவரர் என்ற பெயரின் அர்த்தம் "அரை பெண்ணாக இருக்கும் இறைவன்" என்பதாகும். அர்த்தநாரீசுவரருக்கு, அர்த்தநாரனரி ("அரை ஆண்-பெண்"), அர்த்தநரிஷா ("அரை பெண்ணாக இருக்கும் இறைவன்"), அர்த்தநாரிநடேசுவரா ("அரை பெண் - நடராசர் "), [1] [2] பரங்கடா, [3] நாரனரி ("ஆண்-பெண்"), அம்மையப்பன் ("தாய்-தந்தை" என்று பொருள்படும் ஒரு தமிழ் பெயர்), [4] மற்றும் அர்த்தயுவதிசுவரா ( அசாமில், "ஒரு இளம் பெண் அல்லது பெண் இருக்கும் இறைவன்") போன்ற பெயர்களும் உள்ளன.[5] குப்த பேரரசில் - வரலாற்று எழுத்தாளர் புஷ்பாதந்தா, அவரது "மகிம்னசத்வா" என்னும் நூலில் இந்த வடிவத்தை திகர்தகட்னா எனக் குறிப்பிடப்படும் சொல்லை உபயோகித்துள்ளார். உத்பாலா (வானியலாளர்), தன்னுடைய கருத்தாக பிரிகாட் சம்ஹிதாவில் இந்த வடிவம் "அர்த்த-கௌரீசுவரர்" எனக் குறிப்பிடுகிறார். (கௌரி என்பது பார்வதி தேவியின் மற்றொரு பெயராகும்).[6] விஷ்ணுதர்மோத்திர புராணம் இந்த வடிவத்தை "கௌரீசுவரர்"(கௌரியின் இறைவன் / கணவர்) என்று அழைக்கிறது.[7]

தோற்றம் மற்றும் ஆரம்ப படங்கள்

தொகு

அர்த்தநாரீசுவரரின் கருத்தாக்கம் வேத இலக்கியத்தின் உருவகங்களாக இருக்கும் யமன் - யமி, [8] [9] ஆதி படைப்பாளரான விஸ்வரூபா அல்லது பிரஜாபதி மற்றும் தீ-கடவுளான அக்னி ஆகியோரின் வேத விளக்கங்களால் "ஒரு பசுவுடன் கூடிய காளை" என்று ஈர்க்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. [10] [11] பிரகதாரண்யக உபநிடதத்தில் ஆத்மா ( "ஆன்மா") ஆண் போன்று புருஷர்களின் வடிவில் உள்ளது. ஆண் மற்றும் பெண் தொன்மங்கள் கிரேக்கம் ஹெர்மப்ரோடிடஸ் மற்றும் பிரிகியர்களின் அக்டிஸ்டிஸ் போன்றவற்றில் காணப்படுகிறது.[12]

புருஷா என்பவன் தன்னை ஆண், பெண் என இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறான் என்றும், இரண்டு பகுதிகளும் ஒன்றிணைந்து, எல்லா உயிர்களையும் உருவாக்குகின்றன என்றும் பிரகதாரண்யக உபநிடதம் கூறுகிறது என்று அர்த்தநாரிசுவரர் குறித்த கதைகளில் சொல்லப்பட்டுள்ளது.[13] சுவேதாசுவதர உபநிடத்தில் புராண அர்த்தநாரிசுவரரின் விதையால் உருத்திரன் தோன்றுகிறார். இவர் அனைத்து உலக உயிர்களைப் படைக்கும் புருஷா மற்றும் பிரகிருதியின் ஆணி வேராக விளங்குகிறார். இவர்கள் இருவரும் இணைந்து சம்க்யா தத்துவம் உருவாகியது. இது சிவனின் ஆண்ட்ரோஜினஸ் தன்மையைக் குறிக்கிறது. அதனால் அவரை ஆண் மற்றும் பெண் என்று விவரிக்கிறது. [14]

'அர்த்தநாரிசுவர' என்ற கருத்து ஒரே நேரத்தில் குசான் பேரரசு மற்றும் கிரேக்க கலாச்சாரங்களில் தோன்றியது. இந்த உருவப்படம் குசான் சகாப்தத்தில் (பொ.ச. 30-375) உருவானது, ஆனால் குப்தர்களின் காலத்தில் (பொ.ச. 320-600) முழுமையடைந்தது. [15] [16] முதல் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மதுரா அருங்காட்சியகத்தில் குசான் காலத்து சிற்பத்தூணில் அரை ஆண், அரை பெண் உருவம் உள்ளது, மேலும் விஷ்ணு, கஜா லட்சுமி மற்றும் குபேரன் ஆகியோருடன் அடையாளம் காணப்பட்ட மற்ற மூன்று நபர்களும் உள்ளனர்.[9] [17]

ஆண் பாதி பழங்கால ரோமாபுரி மதத் தெய்வ விழாவில் இலிங்க உரு சார்ந்த அல்லது ஒரு ஊர்த்துவலிங்க உருவம் அபய முத்திரை சைகையுடனும், பெண்ணின் இடது பாதியில், ஒரு கையில் கண்ணாடியை வைத்திருக்கிறது மற்றும் வட்டமான மார்பகத்தைக் கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அர்த்தநாரீசுவரரின் ஆரம்பகால பிரதிநிதித்துவம் ஆகும்.[18] ராஜ்காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகால குசான் பேரரசின் அர்த்தநாரிசுவரின் தலைப் பகுதி மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வலது ஆண் பாதியில் ஒரு மண்டை ஓடு மற்றும் பிறை நிலவுடன் முடி பொருத்தப்பட்டிருக்கிறது; இடது பெண் பாதியில் பூக்கள் அலங்கரிக்கப்பட்ட தலைமுடி நன்கு உள்ளது மற்றும் இடது புற செவியில் பத்ரா-குண்டலா (காதணி) அணிந்துள்ளது. முகத்தில் பொதுவான மூன்றாவது கண் உள்ளது. வைசாலியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு டெரகோட்டா முத்திரையில் அரை மனிதன், அரை பெண் அம்சங்கள் உள்ளன. ஆரம்பகால குசான் படங்கள் அர்த்தநாரீசுவரரை எளிய இரண்டு ஆயுத வடிவத்தில் காட்டுகின்றன, ஆனால் பிற்கால நூல்கள் மற்றும் சிற்பங்கள் மிகவும் சிக்கலான உருவப்படத்தை சித்தரிக்கின்றன.[11]

ராஜ்காட், மதுரா அருங்காட்சியகத்தில் உள்ள குசான் பேரரசு காலத்து அர்த்தநாரீசுவரர் சிலை உருவப்படம்.

அர்த்தநாரீசுவரரின் மூலம் கிரேக்க ஆசிரியர் சுடோபாயிஸ் என்பவரால் குறிப்பிடப்படுகிறது அவரின் (சி. 500 கி.பி.) மேற்கோளின் படி, பர்தனீஸ் என்பவர், இதைப் பற்றி இந்திய தூதரகத்தின் மூலமாகத் தெரிந்து கொண்டு, எலகாபலஸ் (சி. 154-222 கிபி)ஆட்சிகாலத்தில், சிரியா வில் (Emesa இன் அண்டோனியஸ்) (218-22 கி.பி.). [8] [15] ஒரு டெரகோட்டா ஆண்ட்ரோஜினஸ் மார்பளவு சிலை, தக்சசீலாவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை அறிந்தார். இது, சகர்கள் - பார்த்தியப் பேரரசு காலத்தைச் சேர்ந்தது எனவும் அந்தச் சிலை உருவம் பெண் மார்பகங்களுடன் தாடி வைத்த ஒரு மனிதனைக் காட்டுகிறது எனவும் கண்டறியப் பட்டுள்ளது.[16]

சைவம் மற்றும் சாக்தம் ஆகிய இரண்டு முக்கிய இந்து மத தரப்பின் படி, அர்த்தநாரீசுவரின் உருவ அமைப்பு ஒரு முயற்சியாக சிவன் மற்றும் மகாதேவியின் உருவ அமைப்பிற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற ஒத்திசைவான உருவம் ஹரிஹரன் (மாலொருபாகன்), சிவன் மற்றும் விஷ்ணுவின் கலப்பு வடிவமாக , வைணவ பிரிவின் உச்ச தெய்வமாக உள்ளது.[3] [19] [20] [21]மேலும், இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டில், சங்கரன் கோயில் என்னுமிடத்தில் மாலொருபாகன் திரு உருவச்சிலை காணப்படுகிறது.

தொன்மம்

தொகு

பிருங்கி முனிவரின் வரலாறு

தொகு

அர்த்தநாரீசுவர உருவத்துடன் தொடர்புடையது பிருங்கி முனிவரின் கதை. பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் தீவிரபக்தர். இறைவி இதனால் தவம் செய்து அர்த்தநாரீ வடிவம் பெற்ற போதும் பிருங்கி முனிவர் இறைவியையும் சேர்த்து வழிபட விரும்பாது, வண்டு வடிவத்திலே இறைவன் பகுதியைத் துளைத்துத் தனிப்படுத்தி வழிபட்டாராம். இதனால் கோபமடைந்த இறைவி அவரை வலுவிழந்து போகும்படி சாபமிட்டனர். சாபத்தினால் வலுவிழந்து கொண்டு வந்த போதும் பிருங்கி முனிவர் தன்னிலையில் இருந்து மாறவில்லை. நடக்க முடியாத கட்டத்தினை அடைந்தார். சிவன் தன் பக்தனின் நிலை கண்டு இரங்கி அவருக்கு மூன்றாவது காலை அருளினார். இதனால் பிருங்கி முனிவர் மூன்று கால், மூன்று கையுடன் அமைக்கப்படுவதுண்டு[22].

இலக்கியங்களில்

தொகு

அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி பழைய பாடல்களிலே காணலாம். "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகிறது. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" என்று புறநானூற்றூக் கடவுள் வாழ்த்து இதனையே கூறுகிறது.

தேவார பதிகங்களிலும் "வேயுறு தோளி பங்கன்", "வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர்" எனப்படுவது உமையொரு பாகனேயேயாம்.

கோயில்கள்

தொகு

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள அர்த்தநாரீசுவரர் வடிவம் தென்னிந்தியாவில் காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு உமாதேவி வீணையுடனும் சிவன் காளையில் ஏறிய கோலத்திலும் காணப்படுகிறார்.

திருச்செங்கோடு சிவன் கோயிலில் மூலவர் அர்த்தநாரீசுவரராக அமர்ந்துள்ளார். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீசுவரி, பாகம்பிரியாள் என்ற பேர்களுள்ளன. இங்கு அர்த்தநாரீசுவரர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார் [23].

புகைப்பட தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ardhanarishvara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 1. "Monier Williams Sanskrit-English Dictionary (2008 revision)". Archived from the original on 2019-05-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
 2. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 69.
 3. 3.0 3.1 Garg (ed), pp. 598–9
 4. Jordan, Michael (2004). Dictionary of gods and goddesses. Facts on File, Inc. p. 27.
 5. Swami Parmeshwaranand p. 57
 6. Swami Parmeshwaranand p. 60
 7. Collins p. 80
 8. 8.0 8.1 Chakravarti p. 44
 9. 9.0 9.1 Swami Parmeshwaranand p. 58
 10. Kramrisch pp. 200–3, 207–8
 11. 11.0 11.1 Srinivasan p.57
 12. Daniélou pp. 63–7
 13. Srinivasan pp. 57, 59
 14. Srinivasan pp. 57–8
 15. 15.0 15.1 Swami Parmeshwaranand pp. 55–6
 16. 16.0 16.1 Chakravarti p. 146
 17. See image in Goldberg pp. 26–7
 18. Goldberg p. 30
 19. Chakravarti p. 43
 20. Dehejia pp. 37–9
 21. Pande, Dr. Alka. "The Icon of Creation – Ardhanarisvara". Official site of author. Archived from the original on 4 July 2008. பார்க்கப்பட்ட நாள் 6 February 2011.
 22. பூலோகசிங்கம், பொ., இந்துக்கலைக்களஞ்சியம், கொழும்பு, இலங்கை, 1990
 23. "காலச்சுவடு". Archived from the original on 2011-11-17. பார்க்கப்பட்ட நாள் 2013-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்த்தநாரீசுவரர்&oldid=3621095" இலிருந்து மீள்விக்கப்பட்டது