புனித தோமையார் மலை

(பரங்கிமலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பரங்கி மலை (St. Thomas Mount) என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் அமைந்த தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது சென்னை நகரின் வெளிப்புறத்தில் ஒரு சிறு மலை ஆகும். இம்மலை சென்னை நகரின் கிண்டி பகுதியில், சென்னை விமான நிலையத்திற்கு வெகு அருகில் உள்ளது. இது புனித தாமஸ் மலை என்னும் பெயராலும் வழங்கப்பட்டு வருகிறது.

பரங்கிமலை
St. Thomas Mount
அருகாமையில் உள்ளது
மலையிலுள்ள புனித தோமையார் ஆலயம்
மலையிலுள்ள புனித தோமையார் ஆலயம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
வட்டம்தாம்பரம்
அரசு
 • நிர்வாகம்செ.பெ.வ.கு.
மொழிகள்
 • ஆட்சிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
திட்ட நிறுவனம்செ.பெ.வ.கு.

கிறித்தவ சமயத்தை முதன்முதல் இந்தியாவுக்குக் கொணர்ந்தவர் இயேசுவின் சீடரான புனித தோமா என்பதும், அவர் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக இம்மலையில் உயிர்நீத்தார் என்பதும் மரபுவழிச் செய்தி. அதன் அடிப்படையில் இம்மலை புனித தோமையார் மலை என்னும் பெயர் பெற்றது.

போர்த்துகீசியரின் வருகையைத் தொடர்ந்து இம்மலைப் பகுதியில் பல கிறித்தவர்கள் குடியேறினர். 300 அடி உயரத்தில் உள்ள அம்மலைமீது போர்த்துகீசிய மறைப்பணியாளர்கள் 1523-ஆம் ஆண்டில் அழகியதொரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1986, பெப்ருவரி 5-ஆம் நாள் இம்மலைக் கோவிலைச் சந்தித்தார்.

புனித தோமையார் மலையின் அடிவாரத்தில் இந்திய இராணுவத்தின் அலுவலர் பயிற்சி அக்காதெமி (Officer Training Academy [OTA]) அமைந்துள்ளது. அங்கே தொடருந்து நிலையமும் இப்பெயருடன் விளங்குகிறது.

புனித தோமையார் மலையில் அமைந்த கோவில்

தொகு

தோமையார் மலைமீது அமைந்த கோவில் குழந்தைப் பேறு எதிர்பார்க்கும் அன்னை மரியாவுக்கு (Our Lady of Expectation) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புனித தோமா கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்துறந்த இடத்தின்மீது இக்கோவிலைப் போர்த்துகீசியர் கட்டியெழுப்பினர் (ஆண்டு: 1523). கோவிலின் முதன்மைப் பீடத்தின் கீழ் அவ்விடம் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. 1545 மலையடிவாரத்தின் வடக்குப் பக்கத்தில் உயர்ந்தெழுகின்ற கோபுர வாசல்கள் நான்கு உள்ளன. அவற்றின் அருகே ஒரு பெரிய சிலுவை உள்ளது. அதில் 1547 என்னும் ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மலையின் உச்சியைச் சென்றடைய 160 படிகள் கொண்ட படிக்கட்டு செதுக்கப்பட்டுள்ளது.

மலையில் ஏறிச் செல்லும்போது படிகளின் அருகே நெடுகிலும் இயேசுவின் துன்பங்களையும் சாவையும் சித்தரிக்கின்ற சிலுவைப் பாதை சுரூபங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருப்பயணியர் மேலே ஏறிச் செல்லும்போது சிலுவைப் பாதை வேண்டல் நிகழ்த்துவது வழக்கம்.

 
புனித தோமையார் மலையிலிருந்து சென்னை நகரத்தின் ஒட்டுமொத்தப் பார்வை

படத் தொகுப்பு

தொகு

மலையின் அமைவிடம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_தோமையார்_மலை&oldid=4097267" இலிருந்து மீள்விக்கப்பட்டது