நந்துர்பார்
நந்துர்பார் (Nandurbar) ⓘ, இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் வடக்கில் உள்ள காந்தேஷ் பிரதேசத்தில் உள்ள நந்துர்பார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[1]மலைப் பிரதேசமான நந்துர்பார் நகரத்திற்கு 12 கிலோ மீட்டர் தொலைவில் தப்தி ஆறு பாய்கிறது. இது மும்பைக்கு வடகிழக்கே 432 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நந்துர்பார் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் நந்துர்பர் நகர்த்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 21°22′N 74°15′E / 21.37°N 74.25°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நந்துர்பார் |
நிறுவிய ஆண்டு | 1 சூலை 1998 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | நந்துர்பார் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.45 km2 (4.42 sq mi) |
ஏற்றம் | 210 m (690 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,11,037 |
• அடர்த்தி | 9,700/km2 (25,000/sq mi) |
மொழி | |
• அலுவல் மொழி | மராத்தி |
• வட்டார மொழிகள் | பில், குர்ஜர், காந்தேஷி மொழிகள் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 425 412 |
வாகனப் பதிவு | MH 39 |
தொலைபேசி குறியீடு எண் | +91(2564) |
இணையதளம் | www |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 33 வார்டுகளும், 20,904 வீடுகளும் கொண்ட நந்துர்பார் நகரத்தின் மக்கள் தொகை 1,11,037 ஆகும். அதில் ஆண்கள் 57,412 மற்றும் 53,625 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,281 மற்றும் 13,657 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 74.32%, இசுலாமியர் 21.43%, சமணர்கள் 2.11%, சீக்கியர்கள் 0.28%, கிறித்தவர்கள் 0.94% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர். [2]
போக்குவரத்து
தொகுகுஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களின் எல்லையில் உள்ள நந்துர்பார் தொடருந்து நிலையம்[3]குஜராத், மத்தியப் பிரதேசத்தின் நகரங்களுடன் இணைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "२४ रोजी नगराध्यक्ष निवड" (in mr). Lokmat (Nandurbar). 16 June 2015. http://www.lokmat.com/storypage.php?newsid=6908038&catid=21.
- ↑ Nandurbar Population, Religion, Caste, Working Data Nandurbar, Maharashtra - Census 2011
- ↑ Nandurbar railway station