நபன்னா

மேற்கு வங்கத்தின் நிர்வாக தலைமையிடம்

நபன்னா (Nabanna) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள அவுரா மாவட்டத்திலிருக்கும் அவுரா நகரிலுள்ள ஒரு கட்டிடம் ஆகும். மேற்கு வங்கத்தின் தற்காலிக மாநில தலைமைச் செயலகம் நபன்னாவில் இயங்கியது. மந்திர்தலா, சிப்பூர் என்ற முகவரியில் நபன்னா கட்டிடம் அமைந்துள்ளது.[1] 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 அன்று முதலமைச்சர் மம்தா பானர்ச்சி நபன்னா கட்டிடத்தை திறந்து வைத்தார்.[2][3]

நபன்னா
Nabanna
Map
மாற்றுப் பெயர்கள்ஊக்ளி ஆற்றுப்பால ஆணையக் கட்டிடம்
பொதுவான தகவல்கள்
நிலைமைசெயல்படுகிறது
வகைநிர்வாகக் கட்டிடம்
இடம்அவுரா, மேற்கு வங்காளம், இந்தியா
முகவரி325, சரத் சாட்டர்ச்சி சாலை, சிப்பூர், அவுரா-711102
துவக்கம்5 அக்டோபர் 2013
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை14

14 மாடி கட்டிடமாக உள்ள இங்கு அரசாங்கத்தின் ஆடை பூங்கா, ஊக்ளி ஆற்றுப் பால ஆணைய அலுவலகம் போன்றவை இருந்தன, பொதுப்பணித்துறை ஒன்றரை மாதங்களுக்குள் இக்கட்டிடத்தை புதிய தலைமைச் செயலகமாக மாற்றியது.[4] முதலமைச்சர் அலுவலகம் மேல் மாடியில் இயங்கத் தொடங்கியது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நபன்னா&oldid=3217919" இலிருந்து மீள்விக்கப்பட்டது