நமது மக்கள் கட்சி


நமது மக்கள் கட்சி (ந.ம.க.) இந்திய தேர்தல் ஆணையத்தில் 2001 ஆம் ஆண்டு பதிவு செய்ய பட்ட அரசியல் கட்சி. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் அரசியல் கட்சிகளில் நமது மக்கள் கட்சியும் ஒன்றாகும்.[1]

கட்சியின் கொள்கை சமூக நீதி, சமத்துவம், செயலாக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக பாடுபடுவது மற்றும் மனித நேயத்தை பேணி வளர்ப்பது.

கட்சி நிறுவனர் - திரு.மு.ராஜமாணிக்கம்
பதிவு அலுவலகம்: கஸ்பா, வேலூர் மாநகராட்சி
நிர்வாக அலுவலகம்: பவானி நகர், காட்பாடி

கட்சியின் கொடி மேலே சிகப்பு நிறம், நடுவில் மஞ்சள் நிறம், கீழே பச்சை நிறம் கொண்ட மூவர்ண கொடி. கொடியின் மத்தியில் உள்ள மஞ்சள் நிறத்தில் சிகப்பு நிற சிங்கம் பதிக்கப்பட்டுள்ளது. மேல் உள்ள சிகப்பு நிறம் உழைப்பு மற்றும் தியாகத்தை குறிக்கின்றது. மஞ்சள் நிறம் மங்களகரம் மற்றும் வீரத்தை குறிக்கின்றது. பச்சை நிறம் விவசாயம் மற்றும் வளமையை குறிக்கின்றது. நடுவில் உள்ள சிங்கம் பாரம்பரியத்தை குறிக்கின்றது.

தொடக்கம் நமது மக்கள் கட்சி தமிழ் நாடு முத்தரையர் சங்கதின் வாயிலாக உருவானது. எனினும் இந்த கட்சி அனைத்து ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வளர்ச்சிக்காகவும் உரிமைக்காகவும் பாடுபடுகின்றது.

செல்வாக்கு தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இந்த கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் , மதுரை ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், சிவகங்கை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, வேலூர், கோவை , நாமக்கல், சென்னை, தேனீ, பெரம்பலூர், நாகை, கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக செல்வாக்கு உள்ளது.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தமிழ் நாடு முத்தரையர் சங்கம் மற்றும் நமது மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு முதல் அமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 07-02-1996 அன்று திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை நிறுவினார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை திருச்சிராப்பள்ளி பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் என பெயர் சூட்டினார்[2]. 29 பட்ட பெயர்களில் வாழும் முத்தரையர் இன மக்களை ஒரே இனமாக்கி முத்தரையர் என அரசாணை பிறப்பித்தார்.

தமிழ் நாடு முத்தரையர் சங்கம் மற்றும் நமது மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு முதல் அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு திருச்சியில் நூலகத்துடன் சேர்ந்த மணிமண்டபம் அமைக்க 2019இல் அரசாணை பிறப்பித்து நிறை வெற்றியுள்ளார்[3].

போட்டியிட்ட தொகுதிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நமது மக்கள் கட்சியின் போட்டியிட்ட தொகுதிகள்[4] வேலூர் தொகுதி - இ.அ.ஏகாம்பரம் (2009), தஞ்சை தொகுதி - எஸ்.மும்மூர்த்தி (2014), வேலூர் தொகுதி - இ.எம்.கேசவன் (2014)

தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் நமது மக்கள் கட்சியின் போட்டியிட்ட தொகுதிகள் விராலி மலை தொகுதி - மூ.சரவண தேவா (2016), மணச்சநல்லூர் தொகுதி - வீ .பார்த்தீபன் (2016), முசிரி தொகுதி - செல்லப்பெருமாள்(2016), காரைக்குடி தொகுதி -ஆர்.ராஜ்குமார்(2016), அணைக்கட்டு தொகுதி- ஆர்.ஸ்ரீனிவாசன்(2016)

  1. "TN Gazette notification" (PDF). GOVERNMENT OF TAMIL NADU. Archived from the original (PDF) on 11 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "திருச்சி விமான நிலையத்திற்கு மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட வலியுறுத்தல்". Tamil Hindu. Archived from the original on 2 பிப்ரவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 29 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Hindu CM-lays-foundation-stone-for-memorials". https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/cm-lays-foundation-stone-for-memorials/article31843903.ece. பார்த்த நாள்: 17 January 2021. 
  4. "Electwise.in/party/namadhu-makkal-katchi/". பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமது_மக்கள்_கட்சி&oldid=3713295" இலிருந்து மீள்விக்கப்பட்டது