நம் சொங் பூங்கா
நம் சொங் பூங்கா (Nam Cheong Park) என்பது ஹொங்கொங், கவுலூன், சம் சுயி போ நகர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆகும். இந்த பூங்காவை ஆங்காங் அரசு தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுச் சேவைகள் திணைக்களம் ஊடாக நிர்வகித்து வருகிறது. இது நம் சொங் எம்.டி.ஆர் தொடருந்தகம் அருகாமையில் உள்ளது. இப்பூங்கா சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு பூங்கா அல்ல. இந்த நம் சொங் வீட்டு குடியிருப்புத் தொகுதிகளில் உள்ளோர், தமது தேகப்பயிற்சி எடுப்பதற்கும், விளையாடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் மற்றும் குழந்தைகளை விளையாட விடுவதற்குமான ஒரு பூங்கா ஆகும். இதுப்போன்ற பூங்காக்கள் ஹொங்கொங் எங்கும் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த நம் சொங் பூங்காவின் அமைவிடமான சம் சுயி போ நகரில் இருக்கும் நூற்றுக்கணக்கான பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும்.[1]
நம் சொங் பூங்கா | |
---|---|
南昌公園 | |
பூங்கா புல்வெளிகள் | |
வகை | பொது பூங்கா |
அமைவிடம் | சம் சுயி போ, ஆங்காங் |
பரப்பளவு | 3.83 hectares |
திறப்பு | சூலை 1998 |
இயக்குபவர் | ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுச் சேவைகள் திணைக்களம் |
திறந்துள்ள நேரம் | 24 மணி நேரமும் |
பொதுப் போக்குவரத்து | நம் சொங் எம்.டி.ஆர் |
பூங்கா பராமறிப்பு
தொகுஹொங்கொங்கில் உள்ள ஆயிரக்கணக்கான பூங்காக்களின் பராமறிப்பை ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுச் சேவைகள் திணைக்களம் மேற்கொண்டு வருவதைப் போல், இந்த பூங்காவையும் அந்த திணைக்களமே பராமறித்து வருகிறது. பூங்கா காவல் பணியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், பாதுக்காப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் மிகவும் நேர்த்தியாக செய்து வருகிறது. பூங்காவின் உள்ளே எவரும் கதிரைகளில் படுத்தல், எச்சில் துப்புதல், ஈருருளியில் உள்வருதல் போன்ற, பூங்காவின் சட்டத்திட்டங்களை மீறினால், உடனடியாக காவல் துறையினருக்கு அழைப்பு விடுத்து விடுவார்கள். பூங்கா மிகவும் தூய்மையுடன் காட்சியளிக்கும். இந்த பூங்கா மூடப்படுவதில்லை. 24 நான்கு மணித்தியாளமும் திறந்திருக்கும்.
அகலப்பரப்பு காட்சி
தொகுநம் சொங் பூங்காவின் இந்தப் பகுதி தேகப்பயிற்சி செய்வோருக்கான உபகரணங்களும், சிறுவர்களுக்கான விளையாட்டு திடலும் ஆகும். இந்த திடலின் நிலப்பகுதி ஒரு வகை இரப்பர் போன்ற தரையமைப்பை கொண்டது. சிறுவர்கள் தவறி விழுந்தாலும் எந்த ஆபத்தும் ஏற்படாத வாறு பாதுக்காப்பாகக் கட்டப்பட்டுள்ளது. அநேகமாக ஹொங்கொங்கில் ஏனைய பூங்காக்களைப் போன்றே இதுவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Park in Sham Sui Po". Archived from the original on 2012-10-16. பார்க்கப்பட்ட நாள் 2011-01-11.