நயன்தாரா சக்ரவர்த்தி
நயன்தாரா சக்ரவர்த்தி (பிறப்பு 20 ஏப்ரல் 2002), பேபி நயன்தாரா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு நடிகையாக இருக்கிறார். இவர் தென்னிந்தியாவின் திரைப்பட துறையின் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவருகிறார். பேபி நயன்தாரா 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த கிளுக்கம் கிளுகிளுக்கம் என்ற மலையாள படத்தில் தனது நடிப்புத்திறமையால் 2006 ஆம் ஆண்டில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான சத்தியம் நினைவு விருது பெற வெற்றிபெற்றார்.[1]
நயன்தாரா சக்ரவர்த்தி நடிகை Film Actress | |
---|---|
பிறப்பு | 20 ஏப்ரல் 2002 திருவனந்தபுரம், கேரளா |
இருப்பிடம் | கொச்சி, கேரளா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | பேபி நயன்தாரா |
கல்வி | தி சாய்ஸ் பள்ளி, திருப்புனித்துறை |
பணி | நடிகை, |
செயற்பாட்டுக் காலம் | 2005 - முதல் |
சொந்த ஊர் | கொல்லம், கேரளா |
ஆரம்ப வாழ்கை
தொகுநயன்தாரா சக்ரவர்த்தி 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் நாள் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பிறந்தார். மணிநாத் சக்ரவர்த்தி மற்றும் பிந்து மணிநாத் இவரின் பெற்றோர்கள் ஆவர். இவருக்கு அய்யன் சக்ரவர்த்தி என்ற இளைய சகோதரன் உள்ளார். இவர்களின் பிரவீகம் கேரளா மாநிலத்தின் கொல்லம் மாவட்டம் ஆகும். இவர் தனது மூன்று வயதிலேயே நடிக்க ஆரம்பித்துள்ளார்.[2] இவர் திருவனந்தபுரத்தில் உள்ள கிறிஸ்து நகர் பள்ளியில் இரண்டாவது வகுப்பு வரையில் பயின்றார். பின் இவர் கொச்சிக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு திருப்புனித்துறையில் உள்ள தி சாய்ஸ் பள்ளியில் பயின்றார். இவர் கிளுக்கம் கிளுகிளுக்கம், சுவர்ணம், லௌடு ஸ்பீக்கர், திருவனந்தபுரம் லாட்ஜ், மறுபடி முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தி சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி சில்க்ஸ் மற்றும் சில்வர் ஸ்டார்ம் பாரக்ஸ் முதலிய வணிக விளம்பரத்தில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sathyan Memorial Awards announced.". The Hindu. 10 October 2018. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/sathyan-memorial-awards-announced/article3052626.ece.
- ↑ "അഭിനയത്തിന് താല്ക്കാലിക വിട.". Mangalam. 10 October 2018. http://www.mangalam.com/news/detail/156256-mangalam-varika.html.