நயீம் காசிம்
நயீம் காசிம் (Naim Qassem) (பிறப்பு:1953), லெபனான் நாட்டின் சியா இசுலாம் மத குருவும்; ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைமைப் பொதுச்செயலாளராக 1991 முதல் 28 அக்டோபர் 2024 முடிய பணியாற்றினார்.[1][2][3]ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொதுச் செயலாளராக பணியாற்றிய அசன் நசுரல்லா இஸ்ரேலின் வான்படைத் தாக்குதலில் 27 செப்டம்பர் 2024 அன்று மறைந்த பிறகு, சூராக் குழு 29 அக்டோபர் 2024 அன்று நயீம் காசீமை ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொதுச்செயலளராக தேர்வு செய்தது.[4][5][6][7]
நயீம் காசிம் | |
---|---|
2014ல் நயீம் காசீம் | |
ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொதுச்செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 அக்டோபர் 2024 | |
முன்னையவர் | அசன் நசுரல்லா |
ஹிஸ்புல்லாவின் துணை தலைமைப் பொதுச்செயலாளர் | |
பதவியில் 1991 – 29 அக்டோபர் 2024 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1953 (அகவை 70–71) கபார் பிலா, நபாதி ஆளுநரகம், தெற்கு லெபனான் |
அரசியல் கட்சி | ஹிஸ்புல்லா |
துணைவர் | அடையாளம் தெரியவில்லை |
பிள்ளைகள் | 6 |
கல்வி | லெபனான் பல்கலைக்கழகம் |
சமயம் | சியா இசுலாம் |
இளமை & கல்வி
தொகுதெற்கு லெபனான் பகுதியில் உள்ள நபாத்தியா ஆளுநரகத்தில் அமைந்த கபார் பிலா எனும் ஊரில் 1953ல் சியா இசுலாம் குடும்பத்தில் நயீம் காசிம் பிறந்தார்.[8][9]இவர் இசுலாமிய மார்க்கக் கல்வியையும்; வேதியியலில் இளநிலை பட்ட படிப்பை லெபனான் பல்கலைக்கழகத்தில் படித்தார்.[8]
தொழில்
தொகு1970களில் லெபனான் இசுலாமிய மாணவர் அமைப்பை நிறுவியர்களில் நயீம் காசிமும் ஒருவராவர்.[9]மூசா அல்-சதர் நிறுவிய அமல் இயக்கத்தில் சேர்ந்தார்.[8][2] 1974 முதல் 1988 முடிய இசுலாமிய கல்வி சங்கத்தின் தலைமைப் பொறுப்பு வகித்தார்.[9] ஹிஸ்புல்லா அமைப்பை நிறுவுவதில் காசிம் பங்கு வகித்தார். காசிம் 1991ல் ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைமைப் பொதுச்செயலர் ஆனார்.[8][10]
படைப்புகள்
தொகுநயீம் காசிம் எழுதிய நூல்கள்:
- Hezbollah: The Story from Within.[11]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Andrew Coombes in Beirut (2007). "Interview: Naim Qassem". Al Jazeera. http://english.aljazeera.net/news/middleeast/2007/11/2008525183720231945.html.
- ↑ 2.0 2.1 "Who is Sheikh Naim Qassem, Hezbollah's deputy leader who spoke on Monday?". Reuters.
- ↑ "Who is Sheikh Naim Qassem, Hezbollahs deputy leader who spoke on Monday?". LBCIV7 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-30.
- ↑ Naim Qassem elected new Hezbollah chief, to succeed Hassan Nasrallah
- ↑ Hezbollah names deputy head Naim Qassem to succeed slain leader
- ↑ Hezbollah finally appoints a new chief Naim Qassem
- ↑ Hezbollah names Naim Qassem as new leader, Israel says he won't last long
- ↑ 8.0 8.1 8.2 8.3 "Sayyed Nasrallah re-elected for another term". The Weekly Middle East Reporter. 5 December 2009. http://www.thefreelibrary.com/Sayyed+Nasrallah+re-elected+for+another+term.-a0214528324.
- ↑ 9.0 9.1 9.2 Dominique Avon; Anaïs-Trissa Khatchadourian; Jane Marie Todd (10 September 2012). Hezbollah: A History of the "Party of God". Harvard University Press. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-06752-3. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013 – via books.google.com.
- ↑ "Hizbullah Renews Nasrallah as Head of Shiite Party; Forms A New Shura Council". The Daily Middle East Reporter. 20 November 2009. http://www.thefreelibrary.com/Lebanon-Hizbullah.-a0213406603.
- ↑ Glass, Charles (17 August 2006). "Learning from Its Mistakes: Charles Glass on Hizbullah". London Review of Books. http://www.charlesglass.net/archives/2006/08/learning_from_i_1.html. பார்த்த நாள்: 9 April 2013.