அப்பாஸ்-அல்-முசாவி

அப்பாஸ் அல்-முசாவி (Abbas al-Musawi) (பிறப்பு:26 அக்டோபர் 1952 – 16 பிப்ரவரி 1992) லெபனான் நாட்டின் சியா இசுலாம் மத குருவும்; ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமைப் பொதுச் செயலாளரும் ஆவார். 1992ல் இஸ்ரேல் வான் படையின் துல்லியத் தாக்குதல்களால் கொல்லப்பட்டார்.

அப்பாஸ் அல்-முசாவி
عباس الموسوي
ஹிஸ்புல்லா , தலைமைப் பொதுச்செயலாளர்
பதவியில்
மே 1991 – 16 பிப்ரவரி 1992
முன்னையவர்சுபி அல்-துபைலி
பின்னவர்அசன் நசுரல்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1952-10-26)26 அக்டோபர் 1952
அல்-நபி சயத், பஉலபக்கு-கர்மல் ஆளுநரகம், கிழக்கு லெபனான்
இறப்பு16 பெப்ரவரி 1992(1992-02-16) (அகவை 39)
பஉலபக்கு-கர்மல் ஆளுநரகம், வடக்கு லெபனான்
காரணம் of deathஇஸ்ரேலின் வான் படையின் துல்லியத் தாக்குதலில் கொல்லப்பட்டார்
வேலைசியா இசுலாம் மத குரு

இளமை

தொகு

கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள அல்-நபி சயத் எனும் கிராமத்தில் சியா இசுலாம் குடும்பத்தில் 26 அக்டோபர் 1952 அன்று பிறந்தார்.[1]ஈராக்கில் உள்ள நஜாப் நகரத்தில், ஈரான் குடியரசின் உயர் தலைவரான ரூகொல்லா கொமெய்னி இடம் எட்டு ஆண்டுகள் இசுலாமிய மார்க்க கல்வியைப் பயின்றார். [2]

செயற்பாடுகள்

தொகு

1978ல் லெபனான் திரும்பி அப்பாஸ் அல்-முசாவி, சுபி அல்-துபைலி, அசன் நசுரல்லா மற்றும் அசீம் சபி அல்-தீன் ஆகியவருடன் இணைந்து லெபனான் வாழ் சியா இசுலாம் மக்களுக்காக ஹிஸ்புல்லா அமைப்பை நிறுவினார்.[3] இவர்1985 முதல் 1988 வரை ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவராக பதவி வகித்தார். [4][5][6][7]பின்னர் மே 1991 முதல் இஸ்ரேலால் கொல்லப்படும் வரை 16 பிப்ரவரி 1992 முடிய ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமைப் பொதுச் செயலர் பதவி வகித்தார்.

கொல்லப்படல்

தொகு

16 பிப்ரவரி 1992 அன்று தெற்கு லெபனான் பகுதியில் இருந்த அப்பாஸ் அல்-முசாவியை, இஸ்ரேல் வான் படையினரின் துல்லியத் தாக்குதலில் குண்டடிபட்டு இறந்தார்.[8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Abbās al-Mūsawī". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 23 July 2012.
  2. Deeb, Marius (April 1988). "Shia Movements in Lebanon: Their Formation, Ideology, Social Basis, and Links with Iran and Syria". Third World Quarterly 10 (2): 683–698. doi:10.1080/01436598808420077. 
  3. Ranstorp, Magnus (1997). Hizb'allah in Lebanon : The Politics of the Western Hostage Crisis. New York: St. Martins Press. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-16288-X.
  4. Foreign Report, 30 July 1987
  5. Ha'aretz, 2 October 1987
  6. al-Hayat, 27 November 1989
  7. Independent, 7 March 1990
  8. Gal Perl Finkel, Changing the rules in the Gaza Strip comes with a cost, The Jerusalem Post, 13 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாஸ்-அல்-முசாவி&oldid=4125313" இலிருந்து மீள்விக்கப்பட்டது