சுபி அல்-துபைலி

சுபி அல்-துபைலி (Subhi al-Tufayli) (பிறப்பு:1948) born 1948) லெபனான் நாட்டின் சியா இசுலாம் மத குருவும்; தெற்கு லெபனான் பகுதியில் 1982ஆம் ஆண்டில் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பை நிறுவனரும், அதன் முதல் தலைமைப் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் ஹிஸ்புல்லா அமைப்பில் 1991 வரை பதவி வகித்தார்.இவருக்கு உதவிட அப்பாஸ்-அல்-முசாவி மற்றும் அசன் நசுரல்லா இருந்தனர்.[1][2][3][4]

சுபி அல்-துபைலி
صبحي الطفيلي
தலைமைப் பொதுச்செயலாளர், ஹிஸ்புல்லா
பதவியில்
1989–1991
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்அப்பாஸ்-அல்-முசாவி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1948 (அகவை 75–76)
பிரித்தால், பஉலபக்கு-கர்மல் ஆளுநரகம், கிழக்கு லெபனான்

இவர் ஈராக் நாட்டின் நஜாப் நகரத்தில் இசுலாமிய மார்க்க கல்வியைப் பயின்றார்.[5] கல்வி முடித்து லெபனான் திரும்பிய சுபி அல்-துபைலி, அப்பாஸ்-அல்-முசாவி மற்றும் அசன் நசுரல்லாவுடன் இணைந்து, 1982ல் பெக்கா பள்ளத்தாக்கில் ஹிஸ்புல்லா அமைப்பை நிறுவி, அதன் முதல் தலைமைப் பொதுச் செயலாளர் பதவி வகித்தார்.[6]

1984ஆம் ஆண்டில் லெபனான் பணயக்கைதிகள் நெருக்கடியின் போது[7], லெபனான் இராணுவம் நடத்திய துப்பாகிச் சூட்டில் சுபி அல்-துபைலி படுகாயம் அடைந்தார்.[8] எனவே ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொதுச் செயலர் பதவி அப்பாஸ்-அல்-முசாவிக்கு வழங்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Elie Alagha, Joseph (2011). Hizbullah's Documents: From the 1985 Open Letter to the 2009 Manifesto. Pallas Publications. pp. 22, 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-8555-037-2.
  2. Ranstorp, Magnus (1997). Hizb'Allah in Lebanon: The Politics of the Western Hostage Crisis. London, UK: Palgrave Macmillan. pp. 35, 36. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1057/9780230377509. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-333-68401-6.
  3. Reich, Walter; Kramer, Martin (1998). "8: The moral logic of Hezbollah". Origins of Terrorism: Psychologies, Ideologies, Theologies, States of Mind. Washington DC, USA: Woodrow Wilson Center Press. pp. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-943875-89-7.
  4. M. Shaw, J. Demy, Jeffrey, Timothy (2017). War and Religion: An Encyclopedia of Faith and Conflict. ABC-CLIO. p. 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61069-516-9.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. Alagha, Joseph Elie (2006). The Shifts in Hizbullah's Ideology: Religious Ideology, Political Ideology and Political Program. Amsterdam University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789053569108.
  6. Ranstorp, Magnus, Hizb'allah in Lebanon : The Politics of the Western Hostage Crisis, New York, St. Martins Press, (1997), p.46
  7. Lebanon hostage crisis
  8. Lebanese army hunts down radical cleric

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபி_அல்-துபைலி&oldid=4170714" இலிருந்து மீள்விக்கப்பட்டது