பெக்கா பள்ளத்தாக்கு

பெக்கா பள்ளத்தாக்கு (Beqaa Valley), லெபனான் நாட்டின் கிழக்கில் பால்பெக்-கர்மேல் ஆளுநரகத்தில் அமைந்துள்ளது. இது பெய்ரூத் நகரத்திற்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மேற்கில் லெபனான் மலையும், கிழக்கில் எதிர்-லெபனான் மலையும் அமைந்துள்ளது.[1]இப்பள்ளத்தாக்கின் பெரிய நகரம் பால்பெக் ஆகும்.

பெக்கா பள்ளத்தாக்கு, பால்பெக்-கர்மேல் ஆளுநரகம், லெபனான் கிழக்கு

ஜோர்டா பிளவு பள்ளதாக்கின் வடக்கின் தொடர்ச்சியான பெக்கா பள்ளத்தாக்கு, பெரும் பிளவுப் பள்ளத்தாக்குகின் பகுதியாக உள்ளது. பெக்கா பள்ளத்தாக்கு 120 கிலோ மீட்டர் நீளமும்; 16 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இப்பகுதி நடுநிலக்கடல் சார் வானிலை கொண்டது.[2]

புவியியல், தட்ப வெப்பம் & பொருளாதாரம்

தொகு

மழை மறைவு பிரதேசத்தில் அமைந்த பெக்கா பள்ளத்தாக்கில் குறைவான மழைப் பொழிவு கொண்டுள்ளது. இதன் வடக்கில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 230 மில்லி மீட்டராக உள்ளது.[3] இப்பள்ளத்தாக்கில் இரண்டு ஆறுகள் உற்பத்தியாகிறது. அசி ஆறு சிரியா மற்றும் துருக்கி பகுதியில் பாய்கிறது. லித்தானி ஆறு பள்ளத்தாக்கின் தெற்கில் பாய்ந்து, லெவண்டைன் கடலில் கலக்கிறது. பெக்கா பள்ளத்தாக்கின் மொத்த நிலத்தில் 40% விளைநிலங்களாக உள்ளது.[4] மேலும் கோதுமை, சோளம், பருத்தி மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. பெக்கா பள்ளதாக்கில் போதை தரும் அசீஷ் மற்றும் அபினி செடிகள் மற்றும் திராட்சைக் கொடிகள் பயிரிடப்படுகிறது. பள்ளத்தாக்கின் வடக்கில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களாக உள்ளது

மேற்கோள்கள்

தொகு
  1. Masri, Rania (1997-01-01), "Environmental Challenges in Lebanon", Challenging Environmental Issues (in ஆங்கிலம்), Brill, pp. 73–115, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1163/9789004475076_006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-47507-6, பார்க்கப்பட்ட நாள் 2024-06-10
  2. Neal, Mark (2019-05-23), "Beqaa Valley", A Dictionary of Business and Management in the Middle East and North Africa (in ஆங்கிலம்), Oxford University Press, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acref/9780191843266.001.0001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-184326-6, பார்க்கப்பட்ட நாள் 2024-07-29
  3. "Beqaa, LB Climate Zone, Monthly Weather Averages and Historical Data". weatherandclimate.com. பார்க்கப்பட்ட நாள் 2024-07-29.
  4. "Lebanon's Neglected Agricultural Potential - a Story of Baalbek". welthungerhilfe.org.tr (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கா_பள்ளத்தாக்கு&oldid=4106839" இலிருந்து மீள்விக்கப்பட்டது