பஉலபக்கு-கர்மல் ஆளுநரகம்

லெபனானின் மாகாணம்

பால்பெக் ஹெர்மல் கவர்னரேட் (Baalbek-Hermel Governorate, அரபு மொழி: محافظة بعلبك - الهرمل‎ ) என்பது லெபனானின் ஒரு ஆளுநரகம் ஆகும். இது பால்பெக் மற்றும் ஹெர்மெல் மாவட்டங்களை உள்ளடக்கியது. [3] இவை மொத்தம் 74 நகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தலைநகராக பால்பெக் நகரம் உள்ளது. ஆளுநரகத்தின் பரப்பளவானது 3,009 சதுர கி.மீ (1,162 சதுர மைல்) ஆகும். ஆளுநரகத்தின் எல்லைகளாக வடமேற்கில் அக்கார் ஆளுநரகம், மேற்கில் வடக்கு ஆளுநரகம், தென்மேற்கில் லெபனான் மவுண்ட் ஆளுநரகம், தெற்கே பெக்கா ஆளுநரகம், வடகிழக்கு மற்றும் தென்கிழக்கில் சிரிய ஆளுநர்கங்களான ஹோம்ஸ் மற்றும் ரிஃப் டிமாஷ்க் ஆகியவை உள்ளன. லெபனானின் மிக முக்கியமான விவசாயப் பகுதியான பெக்கா பள்ளத்தாக்கின் வடக்கு பகுதியின் நிலப்பகுதிகளை ஆளுநரகம் கொண்டுள்ளது. [4]

பால்பெக் ஹெர்மல்
محافظة بعلبك - الهرمل
Gouvernorat de Baalbek-Hermel
லெபனானின் ஆளுநரகம்
பால்பெக்
பால்பெக்
லெபனானில் பால்பெக் ஹெர்மல் ஆளுநரகத்தின் அமைவிடம்
லெபனானில் பால்பெக் ஹெர்மல் ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°12′N 36°18′E / 34.2°N 36.3°E / 34.2; 36.3ஆள்கூறுகள்: 34°12′N 36°18′E / 34.2°N 36.3°E / 34.2; 36.3
நாடு லெபனான்
மாவட்டம்பால்பெக் மாவட்டம்
ஹெர்மல் மாவட்டம்
உருவாக்கம்2014
தலைநகரம்பால்பெக்
அரசு
 • ஆளுநர்பஷீர் கோத்ர்
பரப்பளவு[1]
 • மொத்தம்3,009 km2 (1,162 sq mi)
மக்கள்தொகை
 • Estimate (June 2015)[2]4,16,427
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே. (ஒசநே+3)

சிரிய உள்நாட்டுப் போரினால் பதிவுசெய்யப்பட்ட 137,788 அகதிகள் மற்றும் 8,117 பாலஸ்தீனிய அகதிகள் உட்பட ஆளுநரின் மக்கள் தொகை 2015 ஆம் ஆண்டில் 416,427 என யு.என்.எச்.சி.ஆர் மதிப்பிட்டுள்ளது. லெபனான் மக்கள்தொகையில் (சிரிய, பாலஸ்தீன அகதிகளைச் சேர்க்காமல்) பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா முசுலீம்கள், சுன்னிகள் உள்ளனர். அகதிகளில் பெரும்பான்மையினராக சுன்னி முஸ்லிம்கள் உள்ளனர்.

பால்பெக்-ஹெர்மல் கவர்னரேட் 2003 சூலை 16 இல் சட்டம் 522 இயற்றப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த ஆளுநரகத்தை உருவாக்க பால்பெக், ஹெர்மெல் ஆகிய மாவட்டங்கள் பெக்கா ஆளுநரகத்தில் இருந்து பிரிக்கப்பட்டன. [5] ஆளுநரகத்தின் முதல் மற்றும் தற்போதைய ஆளுநராக பஷீர் கோத்ரின் நியமனம் செய்யபட்ட 2014 இல் இருந்து புதிய ஆளுநரகம்ப செயல்படத் தொடங்கியது. ஏற்கனவே லெபனானின் ஏழ்மையான பிராந்தியங்களில் ஒன்றாக உள்ள இங்கு சிரிய அகதிகளின் சமீபத்திய வருகையானது ஆளுநரகத்தின் பலவீனமான உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் மேலும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. [4] சிரியாவின் வன்முறை ஆளுநரகத்துக்குள் பரவியுள்ளது. குறிப்பாக அர்சால் மற்றும் ராஸ் பால்பெக்கைச் சுற்றியுள்ள பகுதியில் வன்முறை பரவியுள்ளது. வடக்கு பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் பால்பெக் ஆகிய பகுதிகளில் ஹிஸ்புல்லா அல்லது அமல் இயக்கம் ஆகியவை தேர்தல் வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆனால் 46% வாக்காளர்கள் சமீபத்திய தேர்தல்களில் எதிர்க்கட்சியான பால்பெக் மதினாட்டி கட்சிக்கு வாக்களித்தனர்.

குறிப்புகள்தொகு

  1. Law, Gwillim. "Lebanon Provinces". Statoids. 20 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Baalbek-Hermel Governorate Profile" (PDF). UNHCR. June 2015. 20 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Mohafazah de Baalbek-Hermel". Localiban. 20 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Bekaa and Baalbek/Hermel Governorates Profile" (PDF). UNHCR. 2016. 20 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Territorial administration of Lebanon". Localiban. 19 February 2017 அன்று பார்க்கப்பட்டது.