நரசாபுரம், கர்நாடகம்
கருநாடக சிற்றூர்
நரசாபுரம் அல்லது நரசிங்கபூர் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில், சந்தூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இங்கு முதலில் ரமணமலை மற்றும் தேசாய் குடும்பங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. நரசாபுரத்தை சந்தூர் மன்னர்கள் ஆண்டனர். இப்பகுதியைச் சூழ்ந்துள்ள பகுதியில் பல இரும்புத் தாது சுரங்கங்கள் அமைந்துள்ளன. இந்தியப் பொதுத்தறை நிறுவனமான தேசிய கணிம வளர்ச்சிக் கழகம் (NMDC), 1969 இல் தோணிமலை நகரியத்தை உருவாக்க கிராம விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியது. ரணஜித்புர தொடருந்து நிலையத்தில் இருந்து இரும்பு கொண்டு செல்வதற்காக என்எம்டிசி உலோகம் மற்றும் கணிம வணிகக் கழகத்துடன் (எம்எம்டிசி லிமிடெட்) கூட்டணி வைத்துள்ளது.
நரசாபுரம்
Narsapura | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 15°3′12″N 76°35′56″E / 15.05333°N 76.59889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெல்லாரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |