நரந்தம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. × aurantium
இருசொற் பெயரீடு
Citrus × aurantium
லின்., 1753[1]

நரந்தம் வாசனை திரவியங்களுக்காகவம், அதன் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் நரந்தங்காயை ஊறுகாயாக செய்து சாப்பிடுகின்றனர்.

நரந்த பழம்

சங்க காலம்

தொகு

இதன் மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.

  • சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று.[2]
  • சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம்.[3]
  • சோலையில் பூத்துக் குலுங்கும்.[4]
  • காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும்.[5]
  • நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம்.[6]
  • நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் ஒன்று.[7]
  • அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார்.[8]
  • நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர்.[9][10][11]
  • இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம்.[12]
  • புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம்.[13]
  • நரந்த மணம் வீசும் கூந்தல்.[14]

இவற்றையும் காண்க

தொகு
சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

தொகு
  1. "Citrus × aurantium L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 1999-12-17. Archived from the original on 2015-10-18. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
  2. குறிஞ்சிப்பாட்டு – அடி 94
  3. பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் – அகநானூறு 141
  4. பரிபாடல் 7-11
  5. பரிபாடல் 16-15
  6. நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302
  7. நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237
  8. புறநானூறு 235
  9. நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல் குறுந்தொகை -52 அகநானூறு 266
  10. கலித்தொகை 54-5
  11. நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய நரந்தம் அரைப்ப, நறிஞ்சாந்து மருக - மதுரைக்காஞ்சி 553
  12. கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கும் அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் - பதிற்றுப்பத்து 11
  13. மணிமேகலை 3-162
  14. குறுந்தொகை 52, பனம்பாரனார்,குறிஞ்சி திணை
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நரந்தம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரந்தம்&oldid=3560108" இலிருந்து மீள்விக்கப்பட்டது