நரான் (நகரம்)

பாக்கித்தானிலுள்ள ஒரு நகரம்

நரான் ( Naran) என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மன்செரா மாவட்டத்திலுள்ள ககன் பள்ளத்தாக்கில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது மன்செரா நகரத்திலிருந்து 119 கிலோமீட்டர் (74 மை) தொலைவில் 2,409 மீட்டர் (7,904 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மேலும்பாபுசர் கணவாயிலிருந்து சுமார் கி.மீ தொலைவிலுள்ளது. [1] இது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். [2] ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் நரான் பள்ளத்தாக்குக்கு வருகை தருகின்றனர்.

நரான்
ناران
நரான் செல்லும் சாலை
நரான் செல்லும் சாலை
நரான் is located in Khyber Pakhtunkhwa
நரான்
நரான்
நரான் is located in பாக்கித்தான்
நரான்
நரான்
ஆள்கூறுகள்: 34°54′22″N 73°38′58″E / 34.90611°N 73.64944°E / 34.90611; 73.64944
நாடுபாக்கித்தான்பாக்கித்தான்
மாகாணம் கைபர் பக்துன்வா மாகாணம்
மாவட்டம்Mansehra
ஏற்றம்
2,409 m (7,904 ft)
நேர வலயம்ஒசநே+5 (PST)

நரானில் சுற்றுலா

தொகு

நரான் ககன், ஒரு சுற்றுலாத் தலமாகப் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இதமான வானிலை காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாக்கைக் காண விரைகின்றனர். இது பாபுசர் கணவாய் மூலம் கோடைகாலத்தில் கில்கிட் கன்சாவிற்கு நுழைவாயிலாகும். நரன் ககன் சுற்றுப்பயணத்தில் பார்வையிட சைபுல் முலுக் ஏரி, லுலுசார் ஏரி, சோக்ரான் போன்ற பல பிரபலமான இடங்கள் உள்ளன [3]

 
வடக்கு பாக்கித்தானுக்கு பயணம் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Naran on map". கூகுள் நிலப்படங்கள். பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
  2. "Top 10 Breathtaking views & Must See Places in Naran Kaghan". narankaghan.pk (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-05-29. பார்க்கப்பட்ட நாள் 2019-08-09.
  3. "Naran Kaghan Best Tour Packages 2023". Ghom Lo Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரான்_(நகரம்)&oldid=3778161" இலிருந்து மீள்விக்கப்பட்டது