நரேந்திர நாத் தார்

நரேந்திர நாத் தார் (Narendra Nath Dhar) (பிறப்பு 1954 செப்டம்பர் 7) இவர் ஓர் இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர் ஆவார். இவர் சரோத் என்ற கருவியை வாசிக்கிறார். ஷாஜகாபூர் / குவாலியர் சேனியா கரானாவின் (பாணி) மிகச்சிறந்த நிபுணர்களில் ஒருவரான இவர் தனது தூய்மையான பாணியிலான வாசிப்பிற்காக மட்டுமல்லாமல், தனது சொந்த வளர்ந்து வரும் பாணியிலும் அறியப்படுகிறார்.

நரேந்திர நாத் தார்
கொல்கத்தா, டோவர் லேன் இசை மாநாட்டில் நரேந்திர நாத் தார் நிகழ்த்துகிறார்,
பின்னணித் தகவல்கள்
பிறப்பு7 செப்டம்பர் 1954 (1954-09-07) (அகவை 69)
பிறப்பிடம்கொல்கத்தா, மேற்கு வங்காளம்
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)சரோத் கலைஞர், கருவியிசையில் பேராசிரியர்
இசைக்கருவி(கள்)சரோத்
இசைத்துறையில்1971-தற்போது வரை
இணையதளம்www.narendranathdhar.in

ஆரம்பகால வாழ்க்கையும், பயிற்சியும் தொகு

இவர், தனது ஆரம்ப பயிற்சியை தனது தந்தை மறைந்த நேமாய் சந்த் தாரின் கீழ் சரோத்தில் தொடங்கினார். இவரது தந்தையின் ஆரம்பகால மறைவு கற்றல் மற்றும் வளர்ச்சியைப் பின்தொடர்வதில் தடையாக இருக்கவில்லை. இவர் பண்டிட் சமரேந்திர நாத் சிக்தர் என்பவரின் கீழ் பயிற்சி தொடங்கினார். சமரேந்திர நாத் சிக்தர், அப்போதைய பண்டிட் ராதிகா மோகன் மைத்ராவின் சீடராவார். 1969 ஆம் ஆண்டில், மைத்ரா இவரை தனது பயிற்சியின் கீழ் கொண்டுவந்தார். மேலும் அவரது தலைமுறையின் மிக அற்புதமான திறமைகளில் ஒருவராக இவரை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இவரது இசை வலிமை உஸ்தாத் அம்ஜத் அலி கானின் கீழ் மேலும் கௌரவத்தைப் பெற்றது. [1]

இசை பாணி தொகு

தார் தனது இசை பாணியை மையமாக உண்மையாக வைத்திருப்பதற்கும், தனது விளக்கக்காட்சிகளுக்கு ஒரு சொந்த அடையாளத் தொடர்பைக் கொடுத்ததற்கும் பாராட்டப்பட்டார். இவர் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தனது தலைமுறை மற்றும் கடந்த காலத்தின் சிறந்த கலைஞர்களின் காலமற்ற பாடல்களைக் கொண்டு வந்துள்ளார்.. [2]

நிகழ்ச்சிகளும், தொழிலும் தொகு

இவரது திறமை பல ஆண்டுகளாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பார்வையாளர்களால் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர், இந்தியாவின் மதிப்புமிக்க இசை மாநாடுகளில் மூத்த இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுடன் அரங்கத்தைப் பகிர்ந்து கொண்டார். 1970 ஆம் ஆண்டில் கருவி இசையில் அனைத்திந்திய வானொலி இசை போட்டியில் பரிசு வென்ற இவருக்கு, சரோத்தில் தீவிர பயிற்சிக்காக இந்திய அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையிலிருந்து தேசிய உதவித்தொகை வழங்கப்பட்டது. 1975 முதல் 1978 வரை 1995 ஆம் ஆண்டில், கருவி இசைத்துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக உத்தரப் பிரதேச அரசால் மதிப்புமிக்க நௌசாத் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச சங்கீ நாடக அகாதமியால் அதமி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. ஒரு வழக்கமான வானொலி மற்றும் தூர்தர்ஷன் கலைஞரான இவரது இசையை எச்.எம்.வி நிறுவனம் 'கோல்டன் டேலண்ட்ஸ் ஆஃப் எச்.எம்.வி' என்ற தலைப்பைக் கொண்ட ஒலி நாடாக்களை வெளியிட்டுள்ளது. [3]

மேற்கோள்கள் தொகு

  1. Kumar, Kuldeep (July 30, 2015). "Soaking the seasonal Malhar". The Hindu. http://www.thehindu.com/features/friday-review/music/narendra-nath-dhars-sarod-recital-at-dhanak-concert-for-harmony-and-peace/article7481902.ece. 
  2. Gupta, Nilaksha (July 18, 2009). "Vintage compositions with a classical touch". The Telegraph. http://www.telegraphindia.com/1090718/jsp/opinion/story_11248742.jsp. 
  3. "NARENDRANATH DHAR – SAROD RECITAL". Rootstrata.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_நாத்_தார்&oldid=3053877" இலிருந்து மீள்விக்கப்பட்டது