நல்லாப்பிள்ளை பாரதம்

நகுடன் கதை பொருள்

நல்லாப்பிள்ளை பாரதம் தமிழ் வைணவக் காப்பியங்களுள் ஒன்று. இது தமிழ்நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நல்லாப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. இது வியாச பாரதத்தை அடியொற்றி முழுவதும் தமிழில் பாடப்பட்டது. மூலநூலில் உள்ளவாறே பதினெட்டுப் பருவங்களையும் 132 சருக்கங்களில் 14,000 பாடல்களால் இதன் ஆசிரியர் பாடியிருக்கிறார். வில்லிபாரதத்தில் உள்ள பாடல்களில் பெரும்பாலானவற்றை தனது நூலில் அப்படியே கையாண்டுள்ள இவர் குறவர்வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடாமல் விட்ட கதைப்பகுதிகள் முழுதையும் பாடியுள்ளார். அத்தோடன்றி குறவர்வில்லிபுத்தூர் ஆழ்வார் சுருக்கமாகப் பாடிய பகுதிகளையும் விவரித்துப் பாடியுள்ளார். எனவே நல்லாப்பிள்ளை பாரதத்தில் குறவர்வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதமும் அடக்கம் எனலாம்.[1] இதன் மூலச்சுவடி தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ளது.[சான்று தேவை] இதன் அச்சுப்பதிப்பு 1888 இல் முழுமையாக வெளியானது.[2] இந்த நூலை அடிப்படையாக கொண்டு மகாபாரத வசன காவியத்தை 1860 இல் த. சண்முக கவிராயர் எழுதி வெளியிட்டார்.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி
  2. [https:/kurinjikuravar@/www.hindutamil.in/news/opinion/columns/966136-shanmukha-kavirayar-s-tamil-gift.html "சண்முகக் கவிராயரின் தமிழ்க்கொடை"] (in ta). 2023-03-26. https:/kurinjikuravar@/www.hindutamil.in/news/opinion/columns/966136-shanmukha-kavirayar-s-tamil-gift.html. 

வெளியிணைப்புகள் தொகு