நவல்பராசி மேற்கு மாவட்டம்
நவல்பராசி மேற்கு மாவட்டம் (Nawalparasi (West of Bardaghat Susta), நேபாள நாட்டின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இது லும்பினி மாநிலத்தின் 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் இராமகிராமம் நகராட்சி ஆகும்.[1]
நவல்பராசி மேற்கு மாவட்டம்
नवलपरासी (बर्दघाट सुस्ता पश्चिम) | |
---|---|
நேபாளத்தின் லும்பின் மாநிலத்தில் நவல்பராசி மேற்கு மாவட்டத்தின் அமைவிடம் (அடர் மஞ்சள் நிறத்தில்) | |
நவல்பராசி மேற்கு மாவட்டத்தின் பிரிவுகள் | |
ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/NP' not found. | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | லும்பினி |
நிறுவிய ஆண்டு | 2015 |
தலைமையிடம் | இராமகிராமம் |
அரசு | |
• வகை | மாவட்ட ஒருங்கிணைப்பு குழு |
• நிர்வாகம் | நவல்பராசி மேற்கு மாவட்டம் ஒருங்கிணைப்பு குழு |
பரப்பளவு | |
• மொத்தம் | 634.88 km2 (245.13 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 3,21,058 |
• அடர்த்தி | 510/km2 (1,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:45 (நேபாள சீர் நேரம்) |
இணையதளம் | dccnawalparasiwest |
முன்னர் இந்த மாவட்டம் நவல்பராசி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 20 செப்டம்பர் 2015ம் ஆண்டில் நவல்பராசி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளைக் கொண்டு நவல்பராசி மேற்கு மாவட்டம் நிறுவப்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
தொகுஇம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 634.88 சதுர கிலோமீட்டர்கள் (245.13 sq mi) மற்றும் மக்கள் தொகை 3,21,058 ஆகும். போச்புரி மொழி 55.7%, [2] நேபாளி மொழி 26.8% மற்றும் தாரு மொழி, மைதிலி மொழி, குரூங் மொழிகள் பேசப்படுகிறது. இம்மாவட்ட மக்கள் தொகை இந்து சமயத்தவர்கள் 88.5%, இசுலாமியர்கள் 6.8%, பௌத்தர்கள் 3.4%, கிறித்தவர்கள் 0.8% மற்றும் பிறர் 0.3% ஆக உள்ளனர்.[3]இதன் சராசரி எழுத்தறிவு 66.6% ஆக உள்ளது. [4]
மாவட்ட நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் 7 நகர்புற நகராட்சிகள் மற்றும் கிராமப்புற நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[5]அதில் 3 நகர்புற நகராட்சிகளாகவும்; 4 கிராமிய நகராட்சிகளாகவும் உள்ளது.[6]
நகர்புற நகராட்சிகள்
தொகு- பர்தாகாட் நகராட்சி
- இராமகிராமம் நகராட்சி
- சன்வால் நகராட்சி
கிராமிய நகராட்சிகள்
தொகு- சுஸ்தா கிராமைய நகராட்சி
- பல்கிநந்தன் கிராமிய நகராட்சி
- பிரதாப்பூர் கிராமிய நகராட்சி
- சராவல் கிராமிய நகராட்சி
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "पूर्वी नवलपरासीको नाम 'नवलपुर जिल्ला' र सदरमुकाम कावासोतीमा राख्ने निर्णय" [Decision to named Nawalpur of the East Nawalparasi and fix Headquarter at Kawasoti]. www.kantipurdaily.com (in நேபாளி). KMG. 22 September 2017. Archived from the original on 22 March 2018. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
- ↑ Gopal Thakur Lohar (2006-06-04). A Sociolinguistic Survey of the Bhojpuri Language in Nepal.
- ↑ NepalMap Religion [1]
- ↑ NepalMap Literacy [2]
- ↑ "CITY POPULATION– statistics, maps & charts". www.citypopulation.de. 8 October 2017. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
- ↑ "District Corrected Last for RAJAPATRA (page no. 261)" (PDF). www.mofald.gov.np. பார்க்கப்பட்ட நாள் 2 March 2018.