நவாப் சையத் முகமது பகதூர்

நவாப் சையத் முஹம்மது பகதூர் (1867 - 12 பிப்ரவரி 1919) 1913 இல் நடைபெற்ற கராச்சி மாநாட்டின் போது இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். [1]பத்ருதீன் தியாப்ஜி மற்றும் ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி ஆகியோருக்குப் பிறகு இந்த பதவியை வகித்த மூன்றாவது முஸ்லீம் ஆவார்.

பிறப்பு தொகு

நவாப் சையத் முஹம்மது தென்னிந்தியாவின் செல்வந்த முஸ்லிம்களில் ஒருவரான மிர் ஹுமாயூன் ஜா பகதூரின் மகனாக கல்கத்தாவில் பிறந்தார். திப்பு சுல்தானின் நான்காவது மகனான சுல்தான் யாசினின் மகள் ஷாஜாதி ஷாருக் பேகமின் மகன் தான் மீர் ஹுமாயூன் ஜா.

அரசியல் தொகு

அவர் இந்திய தேசிய காங்கிரசுக்கு அதன் ஆரம்ப கட்டங்களில் நிதிஉதவி மற்றும் அறிவுசார் ஆதரவை வழங்குவதன் மூலம் உதவினார். 1887 இல் மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் நடைபெற்றபோது, ஹுமாயூன் பகதூர் காங்கிரஸ் தலைவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கினார்.[2]

1894 இல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்த நவாப் சையத் முகமது அவ்வமைப்பின் தீவிர உறுப்பினரானார். முஸ்லிம்களும் இந்துக்களும் சகோதரர்களைப் போலவே வாழ வேண்டும் என்றும் அவர்களின் வெவ்வேறு மதங்கள் அவர்களைப் பிரிக்காமல் அவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் சையத் முகமது தனது அனைத்து உரைகளிலும் உரையிலும் உறுதியாக நம்பினார். இந்திய மக்களை ஒரு வலுவான தேசமாக ஒன்றிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய நோக்கம் என்று அவர் உண்மையாக நம்பினார்.

மெட்ராஸ் ஷெரிப் தொகு

அவர் மெட்ராஸின் முதல் முஸ்லீம் ஷெரிப் ஆக 1896 இல் நியமிக்கப்பட்டார். 1900 ஆம் ஆண்டில் அவர் மெட்ராஸ் சட்டமன்றத்திற்க்கு பரிந்துரைக்கப்பட்டார். மெட்ராஸ் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராக 1903 டிசம்பர் 19 அன்று மெட்ராஸ் இம்பீரியல் சட்டமன்றத்திற்க்கும் பரிந்துரைக்கப்பட்டார்.[3] விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது 1897 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சையத் முஹம்மதுக்கு "நவாப்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இறப்பு தொகு

சையத் முகமது பகதூர் பிப்ரவரி 12, 1919 ஆண்டு இறந்தார்.


இதையும் பார்க்க தொகு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்

ஆதாரங்கள் தொகு

  1. http://www.congress.org.in/new/past-president-detail.php?id=23%7Cஇந்திய[தொடர்பிழந்த இணைப்பு] தேசிய காங்கிரஸ் தலைவர்கள் பட்டியல்
  2. "Nawab Syed Muhammad Bahadur". Indian National Congress இம் மூலத்தில் இருந்து 4 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170804062252/http://inc.in/organization/53-Nawab-Syed-Mohammed-Bahadur/profile. 
  3. India List and India Office List for 1905. Harrison and Sons, London. 1905. பக். 7. https://archive.org/details/bub_gb_3VQTAAAAYAAJ. பார்த்த நாள்: 3 February 2012. "central provinces and berar."