ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி

இந்திய அரசியல்வாதி


ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி Rahimtulla M. Sayani (5 ஏப்ரல் 1847 - 6 ஜூன் 1902) இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக சுரேந்திரநாத் பானர்ஜி அவர்களுக்கு அடுத்ததாக இருந்தவர்.

ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்
பதவியில்
1896–1897
தனிநபர் தகவல்
பிறப்பு (1847-04-05)5 ஏப்ரல் 1847
பம்பாய், இந்தியா
இறப்பு 6 சூன் 1902(1902-06-06) (அகவை 55)
பம்பாய், இந்தியா
பணி கல்வியாளர்,வழக்கறிஞர், அரசியல்வாதி

பிறப்பு தொகு

இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 1847 ஆம் ஆண்டு ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி பிறந்தார், ஆகா கானை பின்பற்றக்கூடிய சீடர்களாக இருந்த கோஜா முஸ்லீம் சமூகத்தில் பிறந்தவர் இவர்.

இந்திய தேசிய காங்கிரசில் தொகு

1885 ஆம் ஆண்டில் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் முதலாவது மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய முஸ்லீம்களில் இருவரில் இவரும் ஒருவராக இருந்தார், அன்றைய தின அமர்வில் இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக உமேஷ் சந்தர் பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் ஒரு மேற்கத்திய கல்விமானாக இருந்தார், மக்கள் மதிக்கத்தக்க, நுட்பமான திறன் கொண்ட ஒரு வழக்கறிஞரராகவும் அவர் பம்பாய் நகரத்தில் இருந்தார்.

  • பம்பாய் மாநகரக் கூட்டுத்தாபனத்தில் உறுப்பினர்
  • 1885 ஆம் ஆண்டில் பம்பாயின் ஷெரிப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1888 ஆம் ஆண்டு பம்பாய் மாநகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக தொகு

1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் 12 வது வருடாந்திர மாநாட்டில் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸில் தலைவராக தேந்தெடுக்கப்பட்ட இரண்டாவது முஸ்லிம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாமவர் பத்ருதீன் தியாப்ஜி.

இறப்பு தொகு

1902 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறப்பெய்தினார்.[2]

இவரின் மேற்கோள் தொகு

ஒரே தேசியமாக ஒன்றாக இணைந்து வளர்ச்சி மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்கவும், ஒருங்கிணைக்கவும், இந்தியா என்பது ஒரு நாடு மட்டுமல்ல, பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஒன்றினைந்த கலவையான மதங்களின் ஒரு கூட்டம்." 1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய மாநாட்டில் இவரின் தாராக மந்திரமாக இருந்தது.

இதையும் பார்க்க தொகு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்

ஆதாரங்கள் தொகு

  1. "Rahimatullah M. Sayani, PAST PARTY PRESIDENTS, Indian National Congress" இம் மூலத்தில் இருந்து 4 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191204132943/https://www.inc.in/en/leadership/past-party-president/rahimatullah-m-sayani. பார்த்த நாள்: 4 December 2019. 
  2. "Obituary - Rahimtulla Mahomed Sayani". The Times (36805). London. 27 June 1902. p. 4.