நவீன் சந்திரா

இந்திய நடிகர்

நவீன் சந்திரா (Naveen Chandra) தெலுங்கிலும், தமிழ் மொழி படங்களிலும் தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தெலுங்கில் வெளியான காதல் திரைப்படமான அந்தால ராட்சசி (2012) என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ் திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடிப்பதற்கு முன்பு இவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[1]

நவீன் சந்திரா
பிறப்புபெல்லாரி, கருநாடகம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

நவீன் சந்திரா கர்நாடகாவின் பெல்லாரியில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை கே.எஸ்.ஆர்.டி.சி.யில் பணிபுரிந்தார். இவர் இயந்திரப் பொறியியலில் சான்றிதழ் பட்டம் பெற்றுள்ளார். மேலும், திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பு பல்லூடகத் துறையில் பணியாற்றினார்.[2]

தொழில்

தொகு

2005 ஆம் ஆண்டு "சம்பவாமி யுகே யுகே" படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான சந்திரா, பின்னர் "கல்யாணம்" என்ற படத்தில் நடித்தார். "அகராதி" என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் வணிகரீதியாக தோல்வியடைந்தது. 2012ஆம் ஆண்டில், இவர் அந்தால ராட்சசி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். இதில் சூர்யாவாக இவர் நடித்ததற்காக பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான வரவேற்பைப் பெற்றார்.[3]

தாளம் என்ற இருமொழிப் படங்களில், சந்திரா ஒரு முன்னாள் நக்சலைட்டாக நடித்தார். தெலுங்கு பதிப்பு 2013இல் வெளியானது. தமிழ் பதிப்பு 2014 இன் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. சத்யசிவாவின் இயக்கத்தில் சிவப்பு படத்தில் இவர் நடிப்பதற்காக, இரண்டு வாரங்கள் தனது நண்பரின் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றினார். இவரது மூன்றாவது படமான "தேரோடும் வீதியிலே" 2014 இல் வெளியானது.[4] தமிழில் பிரம்மன் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். இவர் அடுத்து நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த "மிஸ் இந்தியா" படத்தில் தோன்றினார். தயாரிப்பாளர் சி. வி. குமாரின் "சரபம்" படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார்.[5][6]

சான்றுகள்

தொகு
  1. "need to prove myself as an actor first : Naveen Chandra". 29 January 2014. பார்க்கப்பட்ட நாள் 8 February 2014.
  2. 2.0 2.1 Pecheti, Prakash. "Meet the real-life Ramakrishna". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-15.
  3. "ACTOR NAVEEN CHANDRA INTERVIEW". 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 8 February 2014.
  4. "Variety of roles needed for lasting career: Naveen Chandra". Sify.com. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-12.
  5. Gupta, Rinku. "Returning to his Roots". The New Indian Express. Archived from the original on 2016-08-16. பார்க்கப்பட்ட நாள் 2016-01-12.
  6. "Naveen Chandra's upcoming starrer launched". https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/naveen-chandras-upcoming-starrer-launched/articleshow/64885663.cms. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன்_சந்திரா&oldid=3707504" இலிருந்து மீள்விக்கப்பட்டது