நவோமி ஸ்காட்

நவோமி கிரேஸ் ஸ்காட் (aomi Grace Scott ) (பிறப்பு :61993 மே இவர் ஓர் ஆங்கில நடிகையும் மற்றும் பாடகியுமாவார் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இசை கற்பனை படமான அலாவுதீன்]] என்ற திரைப்படத்தில் இளவரசி ஜாஸ்மினா நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். அறிவியல் புனைகதை நாடகத் தொடரான டெர்ரா நோவா (2011) மற்றும் டிஸ்னி சேனல் டீன் திரைப்படமான லெமனேட் மவுத் (2011) ஆகியவற்றில் நடித்ததற்காக ஸ்காட் முக்கியத்துவம் பெற்றார். சூப்பர் ஹீரோ படமான பவர் ரேஞ்சர்ஸ் (2017) மற்றும் அதிரடி நகைச்சுவை படமான சார்லீஸ் ஏஞ்சல்ஸ் (2019) ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

நவோமி ஸ்காட்
2016 சான் டியாகோ காமிக்-கானில் ஸ்காட்
பிறப்புநவோமி கிரேஸ் ஸ்காட்
6 மே 1993 (1993-05-06) (அகவை 31)
ஹவுன்ஸ்லோ, இலண்டன், இங்கிலாந்து
பணிநடிகை , பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2008 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஜோர்டான் ஸ்பென்ஸ் (தி. 2014)
வலைத்தளம்
naomiscottmusic.com

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஸ்காட் 1993 மே 6 அன்று லண்டனின் ஹவுன்ஸ்லோவில் பிறந்தார்.[1][2] இவரது தாயார் உஷா ஜோஷி, உகாண்டாவில் பிறந்த இந்திய குஜராத்தி வம்சாவளியைச் சேர்ந்தவர். மேலும் இளம் வயதிலேயே ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார். நவோமியின் தந்தை கிறிஸ்டோபர் ஆங்கிலேயர் ஆவார்.[3][4][5] ஸ்காட்டுக்கு ஜோசுவாா என்ற ஒரு மூத்த சகோதரர், இருக்கிறார் [6] இவரது பெற்றோர் இருவரும் வடகிழக்கு லண்டனின் ரெட் பிரிட்ஜில் உள்ள உட்ஃபோர்டில் உள்ள பிரிட்ஜ் தேவாலயத்தில் போதகர்கள் ஆவர் [7] ஸ்காட் மிஷனரி மற்றும் அவுட்ரீச் வேலைகளில் பங்கேற்றுள்ளார். இவர் எசெக்ஸின் லொட்டனில் உள்ள டேவனன்ட் அறக்கட்டளை பள்ளியில் பயின்றார்.

தொழில்

தொகு

ஸ்காட் பிரிட்ஜ் தேவாலய இசிக்குழுவுடன் தனது இசையைத் தொடங்கினார். பள்ளி இசை மற்றும் நாடக தயாரிப்புகளில் தவறாமல் நடித்தார். பின்னர் இவர் பிரித்தன் பாப் பாடகர் கோலே பிரையன் என்பவரால் எடர்னல் என்ற பெண்கள் குழுவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டார். இவர் பிரித்தன் பாடலாசிரியர்கள் மற்றும் தயாரிப்பாளர்களான ஜெனோமேனியாவுடன் இணைந்தார்.[4] 2014ஆம் ஆண்டில், யூடியூப்பில் "ரீலோட்" அவர்களின் "ரீலோட் செசன்ஸ்" தொடரின் ஒரு பகுதியாக, இவரைக் கொண்ட இரண்டு காணொளிகளை வெளியிட்டது.[8][9]

இவரது முதல் பெரிய நடிப்பு பாத்திரம் டிஸ்னியின் தொடரான லைஃப் பைட்ஸ் என்பதாகும். 2010ஆம் ஆண்டில், 2011 ஆம் ஆண்டு டிஸ்னி சேனலின் அசல் திரைப்படமான லெமனேட் மௌத் திரைப்படத்தில் மோகினி "மோ" பஞ்சாரியாக நடித்தார். இது ஒரு அமெரிக்க தயாரிப்பில் இவரது முதல் பாத்திரமாகும்.[10] அதே ஆண்டு இவர் டெர்ரா நோவா என்ற அறிவியல் புனைகதைத் தொடரில் மேடி ஷானனாக நடித்தார். இது 2011 செப்டம்பரில் பாக்ஸ் ஒளிபரப்பு நிறுவனத்தில் திரையிடப்பட்டது.[11] தொடரின் இரண்டாவது பருவம் புதுப்பிக்கப்படவில்லை.[12] 2013ஆம் ஆண்டில், ஸ்காட் தனது லெமனேட் இணை நடிகர் பிரிட்ஜிட் மென்ட்லரின் " ஹரிகேன் " பாடலுக்கான இசைக் காணொளியில் தோன்றினார். 2014 ஆகத்தில், இவர் தனது அறிமுக இசைத்தொகுப்பு இன்விசிபிள் டிவிசன் என்பதை சுயாதீனமாக வெளியிட்டார்.[13] ரிட்லி ஸ்காட்டின் த மார்சன் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் ஸ்காட் ரியோகோவாக நடித்தார். இவரே தனது காட்சிகளை படமாக்கினார். ஆனால் அவை இறுதியில் அகற்றப்பட்டன. ஸ்கிரீன் இன்டர்நேஷனல் அவர்களின் 2015 நட்சத்திரங்களில் ஒன்றாக ஸ்காட்டை தேர்வு செய்தது. 2015 அக்டோபரில், பவர் ரேஞ்சர்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரின் திரைப்படத் தழுவலான பவர் ரேஞ்சர்ஸ் (2017) என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் கிம்பர்லி ஹார்ட், பிங்க் ரேஞ்சர் உடன் இணைந்து நடித்தார். இந்தப் படம் 2017 மார்ச் 24 அன்று வெளியிடப்பட்டது. மேலும் ஸ்காட் தனது முதல் டீன் சாய்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[14] இந்தப் படம் வெளியானதும் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. மேலும் திரையரங்க வசூலில் ஏமாற்றமடைந்தது, இது 105 மில்லியன் டாலர் திட்டத்திற்கு எதிராக உலகளவில் 142 மில்லியன் டாலர்களையே வசூலித்தது.[15][16]

 
2019 நவம்பர், நேர்காணலின் போது சார்லீஸ் ஏஞ்சல்ஸ் நடிகைகளுடன்

கை ரிச்சி இயக்கிய டிஸ்னியின் அலாவுதீன் என்ற திரைப்படத்தில் ஸ்காட் இளவரசி ஜாஸ்மின் வேடத்தில் நடித்தார்..[17][18][19] இவரது நடிப்பு பொதுவாக விமர்சகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றது.[20][21] இப்படத்தில் இவரது நடிப்பிற்காக, ஸ்காட் சாய்ஸ் திரைப்பட நடிகைக்கான டீன் சாய்ஸ் விருதை வென்றார் - அறிவியல் புனைகதை / பேண்டஸி மற்றும் சிறந்த துணை நடிகைக்கான சனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் .[22][23] அலாவுதீன் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. திரையரங்கில் 1 பில்லியன் டாலரை வசூலித்தது.[24][25]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

2014 சூனில், ஸ்காட் கால்பந்து வீரர் ஜோர்டான் ஸ்பென்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[26][27][28]

குறிப்புகள்

தொகு
  1. Eksouzian-Cavadas, Ana (31 May 2019). "Everything You Need To Know About Naomi Scott". Elle Australia. பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.
  2. "Naomi Scott plays Jasmine in Aladdin 2019". Metro. 12 October 2018. பார்க்கப்பட்ட நாள் 10 May 2019.
  3. "Naomi Scott plays Jasmine in Aladdin 2019". Metro. 12 October 2018. பார்க்கப்பட்ட நாள் 10 May 2019.
  4. 4.0 4.1 "NAOMI SCOTT 'Mohini (Mo) Banarjee'". Disney Channel Medianet. Archived from the original on 16 June 2012. பார்க்கப்பட்ட நாள் 17 April 2011.
  5. Barker, Lynn (11 April 2011). "Lemonade Mouth Actors Talk Music and More!". Kidz World. Archived from the original on 23 March 2016. பார்க்கப்பட்ட நாள் 20 October 2016.
  6. "Leadership - The Bridge Church". Archived from the original on 29 March 2017. பார்க்கப்பட்ட நாள் 30 April 2017.
  7. "The Bridge Church Woodford". Archived from the original on 7 September 2011.
  8. Reload (7 November 2014), Hozier: Take Me To Church (Medley) - Naomi Scott, பார்க்கப்பட்ட நாள் 27 July 2019
  9. Reload (19 November 2014), Naomi Scott: Hear The Bells, பார்க்கப்பட்ட நாள் 27 July 2019
  10. Wesley, Tommy (14 April 2011). "Meet the Girls of Lemonade Mouth: Naomi Scott". Archived from the original on 16 September 2012. பார்க்கப்பட்ட நாள் 17 April 2011.
  11. Lachonis, Jon (11 January 2011). "FOX Unleashes Terra Nova Promo Pics". Archived from the original on 14 January 2011. பார்க்கப்பட்ட நாள் 17 April 2011.
  12. "Terra Nova Cancelled by Fox - Ratings". TV by the Numbers. 6 March 2012. Archived from the original on 23 July 2012. பார்க்கப்பட்ட நாள் 7 March 2012.
  13. "Invisible Division - EP". iTunes Store. 30 May 2011. Archived from the original on 27 December 2014. பார்க்கப்பட்ட நாள் 4 June 2011.
  14. Perry, Spencer (8 October 2015). "Naomi Scott is the Pink Ranger in Lionsgate's Power Rangers Reboot!". comingsoon.net. Archived from the original on 25 January 2016. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015.
  15. Romano, Nick (23 June 2017). "Power Rangers director says film suffered from PG-13 rating". Entertainment Weekly. Archived from the original on 25 June 2017.
  16. Velocci, Carli (20 March 2017). "'Power Rangers' Reboot Has Critics Mixed, But Its Performances Pop". TheWrap.
  17. "'Aladdin': Disney Casts Will Smith, Mena Massoud, Naomi Scott". Variety. 15 July 2017. Archived from the original on 15 July 2017. பார்க்கப்பட்ட நாள் 16 July 2017.
  18. Perry, Spencer (15 July 2017). "Disney's Live-Action Aladdin Cast Revealed!". comingsoon.net. Archived from the original on 16 July 2017. பார்க்கப்பட்ட நாள் 16 July 2017.
  19. "'Aladdin': Disney Announces Live-Action Cast Including Will Smith As Genie". Access Hollywood. Archived from the original on 17 July 2017. பார்க்கப்பட்ட நாள் 15 July 2017.
  20. Jorgensen, Tom (22 May 2019). "Aladdin Review". IGN. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
  21. Roeper, Richard (22 May 2019). "'Aladdin': Will Smith's blue Genie is pretty cool, once you get to know him". Chicago Sun Times. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
  22. Yang, Rachel (11 August 2019). "Teen Choice Awards 2019: See the full list of winners and nominees". Deadline Hollywood. Meredith Corporation. பார்க்கப்பட்ட நாள் 11 August 2019.
  23. Mancuso, Vinnie (15 July 2019). "'Avengers: Endgame', 'Game of Thrones' Lead the 2019 Saturn Awards Nominations". Collider. Archived from the original on 16 July 2019. பார்க்கப்பட்ட நாள் 12 August 2019.
  24. McNary, Dave (26 July 2019). "'Aladdin' Flying Past $1 Billion at Worldwide Box Office". Variety. Penske Business Media. பார்க்கப்பட்ட நாள் 30 July 2019.
  25. Tartaglione, Nancy (28 July 2019). "Cat & Mouse: 'The Lion King's $963M WW Through Sunday Pushes Disney To Record $7.67B Global B.O.; 1st Studio To Pass $5B Overseas – International Box Office". Deadline Hollywood. Penske Business Media. பார்க்கப்பட்ட நாள் 28 July 2019.
  26. Lorusso, Billy (21 July 2017). "Who is Playing Jasmine in the New 'Aladdin'?". Elite Daily. பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.
  27. Maitland, Hayley (15 October 2019). "Charlie's Angels Naomi Scott on Turning Director with Husband Jordan Spence". Vogue. பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.
  28. "Aladdin star Naomi Scott: Hollywood's next big Brit girl, on faith, football and family". https://www.telegraph.co.uk/films/0/aladdin-star-naomi-scott-hollywoods-next-big-brit-girl-faith/. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naomi Scott
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவோமி_ஸ்காட்&oldid=4173671" இலிருந்து மீள்விக்கப்பட்டது