நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில்

நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதியின்,[3][4] கிருஷ்ணன்கோவில் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[5] குமரியின் குருவாயூர் (கன்னியாகுமரியின் குருவாயூர்) என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.[6]

நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில்
நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் is located in தமிழ் நாடு
நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில்
நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில்
ஆள்கூறுகள்:8°11′46″N 77°25′34″E / 8.1962°N 77.4261°E / 8.1962; 77.4261
பெயர்
வேறு பெயர்(கள்):குமரியின் குருவாயூர்[1]
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்
சட்டமன்றத் தொகுதி:நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
ஏற்றம்:81 m (266 அடி)
கோயில் தகவல்
மூலவர்:கிருஷ்ணர்
தாயார்:சத்யபாமா,
ருக்மணி
குளம்:உண்டு
சிறப்புத் திருவிழாக்கள்:கிருஷ்ண ஜெயந்தி,
சித்ரா பௌர்ணமி,
வைகுண்ட ஏகாதசி,
சித்திரை பிரம்மோற்சவம்,
பங்குனி உத்திரம்
உற்சவர்:இராஜகோபாலசுவாமி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
வரலாறு
அமைத்தவர்:ஆதித்த வர்மா மகாராஜா[2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 81 மீட்டர் உயரத்தில், 8°11′46″N 77°25′34″E / 8.1962°N 77.4261°E / 8.1962; 77.4261 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இந்த கிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது.[1]

இக்கோயிலின் மூலவர் கிருஷ்ணன்; தாயார்கள் சத்யபாமா மற்றும் ருக்மணி ஆவர். சிவலிங்கம், கருடாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், விஷ்வக்சேனர், சாஸ்தா, நாகர் ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் தலவிருட்சம் நெல்லி மரம் ஆகும். கிருஷ்ண ஜெயந்தி, சித்ரா பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி, சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை முக்கிய திருவிழாக்களாக இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. மாலை மலர் (2022-04-16). "சந்தான வரம் அருளும் கிருஷ்ணன் திருக்கோவில்- நாகர்கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-28.
  2. "Krishnan Temple : Krishnan Krishnan Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-28.
  3. "நாகர்கோவில்: கிருஷ்ணன் கோவிலில் சித்திரை தேரோட்டம்! ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-28.
  4. ValaiTamil. "அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-28.
  5. "Nagercoil, Krishnan temple". vasthurengan.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-28.
  6. Suriyakumar Jayabalan. "தீபாராதனை பிரசாதம் நன்மைகளைத் தரும்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-08-28.

வெளி இணைப்புகள் தொகு