நாக்கி மக்கள்
நாக்கி அல்லது நாஷி மக்கள் என அழைக்கப்படுகின்றனர்) என்பவர்கள் சீனாவில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் யுனான் மாகாணத்தின் வடமேற்குப் பகுதியிலும், சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியிலும் கிழக்கு இமயமலையை ஒட்டிய ஹெங்டுவான் மலைகளில் வசிக்கும் மக்கள் ஆவர்.[1]
நாக்கி மக்கள் வடமேற்கு சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்கள் பிறகு தெற்கே திபெத்திய பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்தனர. இவர்கள் பொதுவாக வளமான ஆற்றங்கரையை ஒட்டிய நிலப்பகுதிகளில் வாழ்கின்றனர். நாக்கி மக்கள், பாய் மக்கள் மற்றும் திபெத்தியர்களுடன் சேர்ந்து, தேயிலை மற்றும் குதிரை வழித்தடங்கள் என அழைக்கப்படும் லாசா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான ஆபத்தான நிலப்பரப்புகளில் வர்த்தகம் செய்தனர்.
உத்தியோகபூர்வ சீன அரசாங்க வகைப்பாடு மோசு மக்களை நாக்கி மக்களின் ஒரு பகுதியாக கருதுகின்றது. இரண்டு குழுக்களும் கியாங் மக்களின் வழித்தோன்றல்களாக இருந்தாலும் மற்றும் அந்தந்த மொழிகளுக்கு இடையே மிகவும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருந்தபோதிலும், இரு குழுக்களும் இப்போது கலாச்சார ரீதியாக வேறுபட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது.[2][3]
கலாச்சாரம்
தொகுநாக்கி மக்களின் வீடுகள் சிறப்பு மரச் செதுக்கல்களால் அலங்கரிக்கப்படுகின்றன. இந்த வீடுகள் பெரும்பாலும் ஹான் கட்டடக்கலை பாணியை மூலமாக கொண்டவையாகும். பொதுவாக ஒரு பெரிய முற்றத்தை சுற்றி மூன்று அல்லது நான்கு வீடுகள் கட்டப்படுகின்றன. அரிதாகக் காணக்கூடிய நாக்கி கைப்பின்னல்கள், டோங்பா ஓவியம், டோங்பா மரச் செதுக்குதல் போன்ற பல கலைகள் நாக்கி மக்களுக்கு சொந்தமானது.
இந்த மக்களின் வழக்கப்படி குடும்பத் தலைவியாக பெண்கள் பொறுப்பேற்று குடும்பத்தை வழிநடத்துகின்றனர். ஒரு பெண் பரம்பரையாக தாயிடமிருந்து பெற்ற சொத்துக்களை அவளுடைய சகோதரிகள் மற்றும் சந்ததியினருக்கு விட்டுவிடுகிறார்.[4]
பெண்கள் அகலமான கைகள் கொண்ட ரவிக்கை மற்றும் நீண்ட கால்சட்டைகளுடன் கூடிய தளர்வான கவுன்களை அணிந்து, இடுப்பில் அலங்கரிக்கப்பட்ட பட்டைகளை அணிகின்றனர். தோளில் செம்மறி ஆட்டு தோலால் செய்யப்பட்ட போர்வையை போர்த்திக்கொள்கின்றனர். மேலும் வெள்ளி காதணிகளுடன், பருத்தியால் செய்யப்பட்ட பெரிய கருப்பு தலைப்பாகைகள் அணிகின்றனர். நவீன காலத்தில், இளைய தலைமுறையினர் மத்தியில் பாரம்பரிய உடைகள் அரிதாகவே அணியப்படுகின்றன. இது இப்போது பொதுவாக கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே அணியப்படுகிறது.
முதலில் இறந்தவர்களை எரிப்பதை வழகமமாக கொண்டிருந்த இந்த மக்கள், குயிங் வம்சத்தின் பிற்பகுதியில் ஆரம்பித்து இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறையை பின்பற்ற துவங்கினர். இறந்தவர்களின் பாவங்களைப் போக்குவதற்காக இறுதிச் சடங்கில் மத நூல்கள் படிக்கப்படுகின்றன.
ஒரு சில நாக்கி ஆண்கள் பழங்கால சீன பாரம்பரியமான பருந்து வேட்டையாடுகின்றனர். இந்த நடைமுறை இன்று சீனாவின் பிற பகுதிகளில் அரிதாகவே காணப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ceinos Arcones, Pedro (2012). Sons of Heaven, Brothers of Nature: The Naxi of Southwest China. Kunming.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Mette Halskov Hansen: Lessons in Being Chinese: Minority Education and Ethnic Identity in Southwest China. University of Washington Press, 1999, page 25.
- ↑ Haibo Yu: Identity and Schooling Among the Naxi: Becoming Chinese with Naxi Identity. Rowman & Littlefield, 2010, page 30.
- ↑ 6 modern societies where women literally rule, MentalFloss, March 4, 2017
- ↑ China and Nepal, Backcountry.
மேலும் படிக்க
தொகு- Guo, Dalie (郭大烈); He, Zhiwu (和志武) (1994). Chengdu: 四川民族出版社 [Nationalities Publishing House Sichuan]. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-5409-1297-9.
{{cite book}}
: Missing or empty|title=
(help). 8+636 pages. - Guo, Dalie (郭大烈) (1991). Kunming: 云南人民出版社 [People's Publishing House Yunnan]. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-222-00610-9.
{{cite book}}
: Missing or empty|title=
(help). - He, Zhonghua (和钟华) (1992). Chengdu: 四川民族出版社 [Nationalities Publishing House Sichuan]. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-5409-0744-4.
{{cite book}}
: Missing or empty|title=
(help). - Li, Jinchun (李近春); Wang, Chengquan (王承权) (1984). Beijing: Publishing House of Minority Nationalities.
{{cite book}}
: Missing or empty|title=
(help). - . Kunming: 云南人民出版社 [People's Publishing House Yunnan]. 1984.
{{cite book}}
: Missing or empty|title=
(help) - . Beijing: Publishing House of Minority Nationalities. 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-105-00964-0.
{{cite book}}
: Missing or empty|title=
(help). - Yan, Ruxian (严汝娴); Song, Zhaolin (宋兆麟) (1984). Kunming: 云南人民出版社 [People's Publishing House Yunnan].
{{cite book}}
: Missing or empty|title=
(help). - Zhan, Chengxu (严汝娴); Wang, Chengquan (王承权) (1980). Shanghai: 上海人民出版社 [People's Publishing House Shanghai].
{{cite book}}
: Missing or empty|title=
(help). - Oppitz, Michael (1997). Zürich: Völkerkundemuseum [Ethnology Museum].
{{cite book}}
: Missing or empty|title=
(help) - Joseph Francis Rock: The Ancient Na-khi Kingdom of Southwest China. 2 volumes (Harvard-Yenching Institute Monograph Series, Vol. VIII and IX) Harvard University Press, Cambridge 1948