நாக்ரோட்டா நகரம்
நாக்ரோட்டா (Nagrota) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் அமைந்த இந்திய இராணுவத்தினர் குடும்பங்கள் கொண்ட பாசறை நகரம் ஆகும். இந்நகரம் ஜம்மு - உதம்பூர் இ டையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 1 ஏ-இல் உள்ளது.
நாக்ரோட்டா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் நாக்ரோட்டாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 32°49′00″N 74°55′00″E / 32.81667°N 74.91667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 19,998 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 181221 |
தொலைபேசி குறியீடு | 0191 |
வாகனப் பதிவு | JK |
அருகமைந்த நகரம் | ஜம்மு, உதம்பூர் |
தட்பவெப்பம் | மித வெப்பம் (கோப்பென்) |
நாக்ரோட்டாவிலிருந்து ஜம்மு 20 கிமீ தொலைவிலும், உதம்பூர் 53 கிமீ தொலைவிலும், வைஷ்ணவ தேவி மலைக்கோயில் 130 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் இராணுவக் குடியிருப்பும், சைனிக் பள்ளியும் உள்ளது. இந்நகரம் நாக்ரோட்டா சட்டமன்றத் தொகுதியில் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நாக்ரோட்டா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 13,836 ஆகும். இதில் ஆண்கள் 9,020 ஆகவும்; பெண்கள் 4,816 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 534 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 90.70% உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 89.30%, இசுலாமியர் 5.31%, சீக்கியர் 4.39%, கிறித்தவர் 0.60% மற்றவர்கள் 0.40% ஆகவுள்ளனர். [1]
இராணுவக் குடியிருப்பு
தொகுஇந்திய இராணுவத்தின் 16வது படையணியின் மிகப்பெரிய குடியிருப்பு இந்நகரத்தில் உள்ளது. [2]
2016 நாக்ரோட்டா தாக்குதல்
தொகு29 நவம்பர் 2016 அன்று காலை 5.30 மணி அளவில் நாக்ரோட்டா இராணுவ குடியிருப்பை, பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் 6 பயங்கரவாதிகள் இரு குழுவாக பிரிந்து தாக்குதல் நடத்தினர். இந்திய இராணுவத்தினர் நடத்திய எதிர்தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இராணுவத்தினர் தரப்பில் ஏழு பேர் உயிர்த்தியாகம் செய்தனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Nagrota Population Census 2011
- ↑ "Nagrota Corps / XVI Corps / White Knight Corps". GlobalSecurity.org. Accessed 2009-10-06.
- ↑ 7 soldiers, 6 militants killed in twin attacks near Jammu