நாடகத் தடைச்சட்டம்

நாடகம்
நாடகக் கலைகள்
தமிழர் நாடகக் கலை
ஈழத்தமிழ் நாடகங்கள்
நாடக வகைகள்
நாடகப்படம்
நாடக வரலாறுகள்
தமிழ் நாடக வரலாறு
கிரேக்க நாடக வரலாறு
ரோமானிய நாடக வரலாறு
எகிப்திய நாடக வரலாறு
மராட்டிய நாடக வரலாறு
இங்கிலாந்து நாடக வரலாறு
சோவியத் நாடக வரலாறு
சீன நாடக வரலாறு
அமெரிக்க நாடக வரலாறு
ஜெர்மன் நாடக வரலாறு
பிரெஞ்சு நாடக வரலாறு
சமஸ்கிருத நாடக வரலாறு
தொகு

நாடகத் தடைச்சட்டம் என்பது விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேடையேற்றப்பட்ட பல்வேறு நாடகங்களைத் தடுக்கும் வகையில் அன்றைய பிரித்தானிய அரசால் கொண்டுவரப்பட்டதாகும். நாடகங்களை மேடையேற்றுவதற்கு பிரித்தானிய அரசானது பல்வேறு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்தது. அவற்றுள் ஒன்று 1876 இல் கொண்டுவரப்பட்ட நாடகத் தடைச்சட்டம் (Dramatic Performances Act) ஆகும். இதன்படி நாடகத்தை மேடையேற்றும் முன் அதன் பிரதியை மாவட்ட ஆட்சியரிடமும் காவல்துறை ஆணையரிடமும் காண்பித்து அனுமதி பெறவேண்டும். காவல்துறையால் ஒவ்வொரு பக்கத்திலும் முத்திரையிட்டப்பட்ட பிரதியும் அனுமதியும் இருந்தால் மட்டுமே நாடக அரங்கத்தினர் நாடகத்தை நிகழ்த்த அனுமதிப்பர் என்று குறிப்பிடப்படுகிறது.

முனைவர் சக்திப் பெருமாள் மதுரை பால சண்முகானந்த சபையினைக் குறித்துப் பேசும் இடத்தில் "ஆங்கில அரசாங்கம் இந்நாடகங்களுக்குத் தடை விதித்தது எனினும் பலப்பல தடைகளுக்கும் இன்னல்களுக்குமிடையே சுதந்திர எழுச்சியூட்டும் நாடகங்களை இவர்கள் அரங்கேற்றத் தவறவில்லை" (தமிழ் நாடக வரலாறு - ப.87) என்று குறிப்பிடுகின்றார். இது நாடகத் தடைச்சட்டம் மற்றும் நாடகக் கலைஞர்களின் நாட்டுப்பற்றை ஒருங்கே எடுத்துரைக்கின்றது. தேசபக்தி, கதரின் வெற்றி, ஜம்புலிங்கம் போன்றவை ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்ட நாடகங்களுள் குறிப்பிடத்தக்கவையாகும்.

1876இல் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் நாடு சுதந்திரமடைந்த பின்னரும் நடைமுறையில் இருந்துள்ளது. 1954 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதாவின் பகுத்தறிவுப் பிரச்சார நாடகங்களை முடக்குவதற்கு ஆங்கிலேயர் கால நாடகத் தணிக்கைச்சட்டத்தை மாநில காங்கிரஸ் கொண்டு வந்ததாக திரு.ஞாநி அவர்கள் குறிப்பிடுகின்றார். "ஒருவழியாக 2012 ஆம் ஆண்டு, நானே தமிழக நாடகத் தணிக்கைக் சட்டத்தை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தேன். இதை விசாரித்த நீதிபதி கே.சந்துரு 2013 ஜனவரியில், இந்த சட்டப்பிரிவு அரசியல் சட்டத்துக்கு முரணானவை என்று தீர்ப்பளித்து 60 வருட அராஜக தணிக்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்." (ஞாநி, பலூன், ப.84) என்று திரு.ஞாநி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

இதன்வழி 2013 ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்த நாடகத் தடைச்சட்டம் ஞாநி அவர்களின் முயற்சியால் திரும்பப் பெறப்பட்டதை அறிய முடிகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. முனைவர் சக்திப் பெருமாள், தமிழ் நாடக வரலாறு, ப.87
  2. ஞாநி, பலூன், ப.84
  3. ஞாநி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடகத்_தடைச்சட்டம்&oldid=4094020" இலிருந்து மீள்விக்கப்பட்டது