ஞாநி என்றும் ஞாநி சங்கரன் என்றும் அறியப்படுபவர் (4 சனவரி 1954 - 15 சனவரி 2018) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.

ஞாநி
ஞாநி சங்கரன்
பிறப்புவே. சங்கரன்
(1954-01-04)சனவரி 4, 1954
செங்கல்பட்டு, தமிழ்நாடு
இறப்பு15 சனவரி 2018(2018-01-15) (அகவை 64)
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ஓ பக்கங்கள் ஞாநி, பரீக்‌ஷா ஞாநி
கல்விபி.ஏ.
பணிபத்திரிகையாளர்
பணியகம்இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, ஆனந்த விகடன், முரசொலி, தீம்தரிகிட
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்மத நம்பிக்கையற்றவர்
பெற்றோர்வேம்புசாமி, பங்காரு
வாழ்க்கைத்
துணை
பத்மா
பிள்ளைகள்மகன்: மனுஷ் நந்தன்

சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். பரீக்‌ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். தீம்தரிகிட என்ற பத்திரிகையை நடத்தியவர்.[1] இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு எளிய மக்கள் கட்சியின் சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2014 சூன் 28 அன்று எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை தொகு

அப்பா வேம்புசாமி (1907-1997) சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்; அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது. பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் (1973-74). பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார் (1974). அதன் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார் (1975).

மறைவு தொகு

சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த ஞாநி சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் 2018 சனவரி 15 திங்கட்கிழமை அன்று காலமானார்.[3]

ஆக்கங்கள் தொகு

கட்டுரைத் தொகுப்புகள் தொகு

  • பழைய பேப்பர்
  • மறுபடியும்
  • கண்டதைச் சொல்லுகிறேன்
  • கேள்விகள்
  • மனிதன் பதில்கள்
  • நெருப்பு மலர்கள்
  • பேய் அரசு செய்தால்
  • அயோக்யர்களும்முட்டாள்களும்
  • கேள்விக் குறியாகும் அரசியல்
  • அறிந்தும் அறியாமலும்
  • ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்)[4]
  • என் வாழ்க்கை என் கையில் (இணையாசிரியர்: மா)
  • ஆப்பிள் தேசம் (தினமணி கதிர்-ல் வெளிவந்த பயணக் கட்டுரைத் தொடர்)

நாடகங்கள் தொகு

  • பலூன்
  • வட்டம்
  • எண் மகன்
  • விசாரணை
  • சண்டைக்காரிகள்

புதினங்கள் தொகு

  • தவிப்பு

திரைக்கதை தொகு

  • அய்யா (பெரியார் வாழ்க்கை)

குறும்படங்கள் தொகு

  • அய்யா
  • ஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? (ஒரு ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில், ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது)

மேற்சான்றுகள் தொகு

  1. செல்வ புவியரசன் (12 மே 2018). "தீம்தரிகிட: ஓங்கி ஒலித்த ஒற்றைக் குரல்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 மே 2018.
  2. "ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எழுத்தாளர் ஞானி விலகல்: கட்சியின் உடல் நிலை சரியில்லை என்று குற்றச்சாட்". தினத்தந்தி. 28 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2014. {{cite web}}: line feed character in |title= at position 11 (help)
  3. "எழுத்தாளர் ஞாநி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்". 15-01-2018. பார்க்கப்பட்ட நாள் 15-01-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. ஓ! பக்கங்கள் (பாகம் 1)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞாநி&oldid=3638021" இலிருந்து மீள்விக்கப்பட்டது