நாடாய்வாளர்
நாடாய்வாளர் (Geographic Explorer) என்பவர் புவியியல் மற்றும் நிலப்பரப்புகளின் தகவல்களைத் தேடி பயணிக்கும் நபராவார். [1]
பயணத்திற்கான காரணம்
தொகுநாடாய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பயணங்களை மேற்கொண்டனர். [2]
- சிலர் கடல் கடந்து வாணிகத்தின் மூலம் பெரும் பொருள் பெற்றுச் செல்வர்களாகிவிடலாம் என்று கருதினார்கள்.
- தங்கள் அரசுக்குப் புதுப்புது நாடுகளைக் கண்டுபிடித்துச் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் புறப்பட்டுச் சென்றவர்களும் உண்டு.
- பிறநாட்டு மக்களைத் தங்கள் சமயத்திற்கு மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் பயணம் செய்தனர்.
- ஆறுகள் உற்பத்தியாகும் இடம், துருவங்களிலுள்ள பனிக்கண்டங்கள் முதலியவற்றைக் கண்டறிய வேண்டும் என்றும் பலர் பயணம் செய்தனர்.
சவால்கள்
தொகுபண்டைய நாடாய்வாளர்களுக்குப் பல இன்னல்களும் இடையூறுகளும் நேர்ந்தன. உணவு இல்லாமலும், புயல், வெள்ளம் போன்றவற்றில் சிக்கியும், காடுகளில் வசித்த பழங்குடியின மக்களாலும், கொடிய விலங்குகளாலும், பலர் துன்பப்பட்டனர். சிலர் இறந்து போனதுண்டு.
புகழ்பெற்ற நாடாய்வாளர்கள்
தொகுகொலம்பஸ், மார்க்கோ போலோ, வாஸ்கோ ட காமா, மெகல்லன், சர் பிரான்சிஸ் டிரேக், சர் வால்ட்டர் ராலி, ஜேம்ஸ் குக், டேவிட் லிவிங்ஸ்ட்டன், ராபர்ட்பியரி, ராபர்ட் ஸ்காட் முதலியவர்கள் புகழ்பெற்ற நாடாய்வாளர்களுள் சிலர் ஆவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meaning of Explorer". Merriam-Webster. Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
- ↑ "Why We Explore". education.nationalgeographic.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-18.