நாடார் மகாஜன சங்கத்தின் எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி
நாடார் மகாஜன சங்கத்தின் எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ( எஸ். வி. என் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது) (Nadar Mahaja Sangam S. Vellaichami Nadar College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், மதுரையின், நாகமலையில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனமாகும். இது 1965 ஆம் ஆண்டில் நாடார் மகாஜன சங்கத்தால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியானது இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்குகிறது. இந்த கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இது தன்னாட்சி பெற்றதாகவும், ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாக உள்ளது. மேலும் 10 மார்ச் 2012 அன்று பெங்களூரில் உள்ள தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) "ஏ" தர அங்கீகாரத்தை பெற்றது. [1]
வகை | கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1965 |
தலைவர் | ஜி. கரிக்கோல் ராஜ் |
முதல்வர்P I/C | ஏ. ஜவகர் |
அமைவிடம் | , , இந்தியா |
வளாகம் | 44 ஏக்கர் நகர்ப்புறம் |
சேர்ப்பு | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.nmssvnc.edu.in/ |
வரலாறு
தொகுசங்க உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளைக் கொண்டு 1965 ஆம் ஆண்டில் நாடார் மகாஜன சங்கத்தால் இக்கல்லூரி துவங்கப்பட்டது. இக்கல்லூரிக்கு எஸ். வெள்ளைச்சாமி நாடார் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். இதன் துவக்கத்தில் 330 மாணவர்கள்,15 ஆசிரியர்கள்,12 அலுவலக பணியாளர்களுடன் துவங்கப்பட்டது. இக்கல்லூரியை 1965 சூலை 20 அன்று கு காமராசர் திறந்துவைத்தார். 986 ஆம் ஆண்டில், இது இருபாலருக்கான கல்வி நிறுவனமாக மாற்றப்பட்டது, 2007 இல், தன்னாட்சி பெற்றது. இது முதுகலை ஆராய்ச்சி படிப்புகளை வழங்கும் நிறுவனமாகவும் இப்போது உள்ளது. 1990 ஆம் ஆண்டு, கல்லூரி தனது வெள்ளி விழாவை கொண்டாடியது அதற்கு அப்போதைய தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த சுர்ஜீத் சிங் பர்னாலா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் மத்திய மந்திரி மோகன் குமாரமங்கலம், முன்னாள் முதலமைச்சர்மு.கருணாநிதி, ஜோர்ஜ் பெர்னாண்டஸ் ஆகிய பலர் இந்த கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளனர்.[2]
வழங்கப்படும் படிப்புகள்
தொகுஇந்த வளாகத்தில் 14 வழக்கமான படிப்புகள்(Regular courses) மற்றும் 24 சுயநிதி படிப்புகள் ஆகியவை அடங்கும். இதில் ஏஐசிஇடிஏ -வின் அங்கீகாரம் பெற்ற, எம்பிஏ மற்றும் எம்.சி.ஏ போன்றவையும் அடங்கும்.[3]
இளங்கலை படிப்புகள்
தொகு- இளங்கலை(தமிழ்)
- இளங்கலை(ஆங்கில இலக்கியம்)
- இளங்கலை (பொருளியல்)
- இளங்கலை (வரலாறு)
- இளங்கலை (தாவரவியல்)
- இளங்கலை (கணினி அறிவியல்)
- இளங்கலை (வேதியியல்)
- இளங்கலை (கணிதம்)
- இளங்கலை (இயற்பியல்)
- இளங்கலை (விலங்கியல்)
முதுகலை படிப்புகள்
தொகுமுதுகலை (வரலாறு) முதுகலை (இயற்பியல்) முதுகலை (வேதியியல்)
ஆராய்ச்சி படிப்புகள்
தொகுஎம்.பில் (வணிகவியல்) எம்.பில் (வேதியியல்) எம்.பில் (இயற்பியல்) எம்.பில் (வரலாறு)
வேலைவாய்ப்பு
தொகுஆளுமை மேம்பாட்டுத் திட்டங்கள் ஒவ்வொரு இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் நடத்தப்படுகின்றன.தொழிற்பயிற்சி மற்றும் விருந்தினர்களின் விரிவுரைகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.[4]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "NAAC Search". Archived from the original on 2017-09-17. பார்க்கப்பட்ட நாள் 2017-06-11.
- ↑ "NMSSVN College History".
- ↑ "Courses offered at the college".
- ↑ "Placements at the college".