நான்கு சுவர்கள்

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நான்கு சுவர்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் [2] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1971 பெப்ரவரி 6 அன்று வெளியாகி, வணிக ரீதியாக தோல்வியடைந்தது.

நான்கு சுவர்கள்
குறுந்தகட்டு உறை
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புவி. எஸ். சர்மா
ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்
பி. எஸ். மணி[1]
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
வெளியீடுபெப்ரவரி 6, 1971
ஓட்டம்.
நீளம்4523 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருடர்களான ஜெய்சங்கரும், ரவிச்சந்திரனும் ஒரு வேட்டுத்துத் திருடச் செல்கின்றனர். அங்கிருக்கும் முதியவர் அவர்களிடம் சாவியைத் தருகிறார். அதன் பிறகே அவர் தாங்கள் வளர்ந்த அநாதை விடுதியின் தலைவர் என்று அவர்களுத்துத் தெரிகிறது. நீங்கள் மனது வைத்தால் குற்றவாளிகளைத் திருத்தமுடியும் என்று கூறிவிட்டு இறந்துவிடுகிறார். இதையடுத்து இருவரும் குற்றவாளிகள் சிலரைத் தேடிப்பிடித்து, அந்த முதியவரின் நிலத்தில் வேலை செய்யவைத்து திருத்துகின்றனர்.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

நாங்கு சுவர்கள் படத்தை கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதி இயக்கினார். இப்படத்தை ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் வி. எஸ். சர்மா, பி. எஸ். மணி ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.[1] இது பாலச்சந்தரின் முதல் வண்ணப் படமாகும்.[3] அத்துடன் நடிகர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த இரண்டாவது படமாகும்.[4] ஸ்ரீவித்யா பார்வை குறைபாடுள்ள ஒரு பாத்திரத்தில் நடித்தார், அதற்காக அவர் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிய வேண்டியிருந்தது.[5]

பாடல்கள்

தொகு

படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு கண்ணதாசனின் வரிகள் எழுத எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[6] ஓ மைனா ஓ மைனா பாடல் படத்தில் இரண்டுமுறை இடம்பெற்றது. எல். ஆர். ஈசுவரி பாடிய நான் ஒரு பாட்டுத் தோட்டம் என்ற பாடல் முதலில் நான் ஒரு பள்ளிக்கூடம் என்று எழுதப்பட்டிருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நினைத்தால் நான்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா  
2. "ஓ மைனா ஓ மைனா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
3. "ஓடி வாவென"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், டி. எம். சௌந்தரராஜன்  
4. "ஓ மைனா ஓ மைனா"  டி. எம். சௌந்தரராஜன்  
5. "நான் ஒரு பாட்டுத் தோட்டம்"  எல். ஆர். ஈசுவரி  
6. "வானம் பூமி"  சீர்காழி கோவிந்தராஜன்  

வரவேற்பு

தொகு

நாங்கு சுவர்கள் 1971 பிப்ரவரி 6 அன்று வெளியாகி,[7] வணிகரீதியாக தோல்வியடைந்தது.[4] இப்படமானது வி. சாந்தாராம் இயக்கிய இந்தி படமான தோ ஆங்கேன் பாரா ஹாத் (1957) எனபதன் பாதிப்பில் உருவானது என்று பிலிம் வேர்ல்டின் டி. ஜி. வைத்தியநாதன் விவரித்தார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Naangu Suvargal [Four Walls] (motion picture). Screen Entertainment. 1971. Credits, from 0:00 to 2:51.
  2. "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024. 
  3. "சிகரம் தாண்டிய இயக்குனர் சிகரம் - பாலச்சந்தர்!" (in ta). Ithayakkani. 23 December 2014 இம் மூலத்தில் இருந்து 12 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180212153129/http://www.ithayakkani.com/jsp/Content/display_content_front.jsp?linkid=26&content=1326. 
  4. 4.0 4.1 Aravind, CV (25 September 2017). "From 'Pasamalar' to 'Vikram Vedha', Tamil cinema's experiments with multi starrers". தி நியூஸ் மினிட். Archived from the original on 12 February 2018. பார்க்கப்பட்ட நாள் 12 February 2018.
  5. "கே. பாலசந்தரா பேசினார்?". Kalki. 10 August 1980. pp. 36–37. Archived from the original on 4 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-03 – via இணைய ஆவணகம்.
  6. "Naangu Suvargal songs". Songs4all. Archived from the original on 8 August 2019. பார்க்கப்பட்ட நாள் 8 August 2019.
  7. "நான்கு சுவர்கள் / Nangu Suvargal (1971)". Screen 4 Screen. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 23 June 2021.
  8. Vaidyanathan, T. G. (1971). "How to make foreign movies in an Indian Language". Film World. Vol. 7. pp. 53–54. Archived from the original on 13 January 2023. பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்கு_சுவர்கள்&oldid=4015218" இலிருந்து மீள்விக்கப்பட்டது