நாப்தியோனிக் அமிலம்

நாப்தியோனிக் அமிலம் (Naphthionic acid) என்பது C10H6(SO3H)(NH2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியல் சேர்மமாகும். அமினோநாப்தலீன்சல்போனிக் அமிலங்களில் ஒன்றான இச்சேர்மம் நாப்தலீனிலிருந்து பெறப்படும் ஒரு வழிப்பொருளாகும். ஈசேர்மத்தின் கட்டமைப்பில் அமீன், சல்போனிக் அமிலம் என்ற இரண்டு வேதி வினைக்குழுக்களும் இடம்பெற்றுள்ளன. வெண்மை நிறத்துடன் திண்மமாகக் காணப்படும் இதன் வர்த்தக மாதிரிகள் சாம்பல் நிறத்தில் கிடைக்கின்றன [1]. உரோச்செலீன் போன்ற அசோ சாயங்கள் தயாரிப்பில் நாப்தியோனிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையின்போது அமிலத்தில் உள்ள அமினோ தொகுதி ஈரசோனியமாக்கப்பட்டு குறிப்பிட்ட β-நாப்தாலுடன் இணைக்கப்படுகிறது. 1-அமினோநாப்தலீனுடன் கந்தக அமிலத்தை வினைபுரியச் செய்து இது தயாரிக்கப்படுகிறது [2]

நாப்தியோனிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-அமினோநாப்தலீன்-1-சல்போனிக் அமிலம்
வேறு பெயர்கள்
பைரியாசு அமிலம்
இனங்காட்டிகள்
84-86-6
ChEBI CHEBI:38219
ChemSpider 6532
EC number 201-567-9
InChI
  • InChI=1S/C10H9NO3S/c11-9-5-6-10(15(12,13)14)8-4-2-1-3-7(8)9/h1-6H,11H2,(H,12,13,14)
    Key: NRZRRZAVMCAKEP-UHFFFAOYSA-N
  • InChI=1/C10H9NO3S/c11-9-5-6-10(15(12,13)14)8-4-2-1-3-7(8)9/h1-6H,11H2,(H,12,13,14)
    Key: NRZRRZAVMCAKEP-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6790
SMILES
  • c1ccc2c(c1)c(ccc2S(=O)(=O)O)N
பண்புகள்
C10H9NO3S
வாய்ப்பாட்டு எடை 223.24
தோற்றம் வெண்மைநிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. 4-Amino-1-naphthalenesulfonic acid; MSDS No. 250619; Sigma–Aldrich Chemie GmbH: Steinheim, 29 Dec 2011.
  2. Gerald Booth "Naphthalene Derivatives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a17_009.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாப்தியோனிக்_அமிலம்&oldid=2138768" இலிருந்து மீள்விக்கப்பட்டது