நாராயண் சாண்டல்
நாராயண் சாண்டல் (Narayan Chandel) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சத்தீசுகர் மாநிலத்தின் பாரதிய சனதா கட்சி உறுப்பினரான இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.[1][2] இயாஞ்சீர்-சாம்பா தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார், மேலும் சத்தீசுகர் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.
நாராயண் சாண்டல் Narayan Chandel | |
---|---|
சத்தீசுகர் சட்டமன்றம் | |
பதவியில் 18 ஆகத்து 2022 – 3 திசம்பர் 2023 | |
முன்னையவர் | தரம்லால் கௌசிக்கு |
பின்னவர் | சரண் தாசு மகந்து |
சத்தீசுகர் சட்டப் பேரவை, துணை சபாநாயகர் | |
பதவியில் 2 ஆகத்து 2010 – 11 திசம்பர் 2013 | |
முன்னையவர் | பத்ரிதர் திவான் |
பின்னவர் | பத்ரிதர் திவான் |
சத்தீசுகர் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 11 திசம்பர் 2018 – 3 திசம்பர் 2023 | |
முன்னையவர் | மோதி லால் தேவாங்கன் |
பின்னவர் | வியாசு காசியபு |
தொகுதி | இயாஞ்கீர்-சாம்பா |
பதவியில் 2008–2013 | |
முன்னையவர் | மோதி லால் தேவாங்கன் |
பின்னவர் | மோதி லால் தேவாங்கன் |
தொகுதி | இயாஞ்கிர்-சாம்பா |
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1998–2003 | |
முன்னையவர் | சரண் தாசு மகந்து |
பின்னவர் | மோதி லால் தேவாங்கன் |
தொகுதி | சாம்பா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 ஏப்ரல் 1965 ஜாஞ்சுகீர், மத்தியப் பிரதேசம், இந்தியா (தற்பொழுது சத்தீசுகர், இந்தியா) |
அரசியல் கட்சி | பாரதீய சனதா கட்சி |
துணைவர் | பிரமிளா சாண்டல் |
பிள்ளைகள் | 1 மகன், 2 மகள்கள் |
வாழிடம்(s) | இயாஞ்கீர், சத்தீசுகர், இந்தியா |
தொழில் | அரசியல்வாதி |
இணையத்தளம் | narayanchandel |
மூலம்: [1] |
அரசியல் வாழ்க்கை
தொகுமுதன்முதலில் 1998 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மத்தியப் பிரதேசத்தில் இருந்து சத்தீசுகர் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, இவர் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தீசுகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்திய தேசிய காங்கிரசின் மோதி லால் தேவங்கனிடம் 7,710 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மீண்டும், இவர் 2008 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சத்தீசுகர் சட்டமன்றத்தில் துணை சபாநாயகராக ஆனார். [4] 2018 ஆம் ஆண்டில், காங்கிரசு கட்சியின் மோதி லால் தேவங்கனை 4,188 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து நாராயண் சாண்டல் மீண்டும் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chhattisgarh: BJP appoints MLA Narayan Chandel as new legislative party leader". Hindustan Times. 2022-08-18.
- ↑ "इंतजार खत्म, तैयार हुई 'विष्णु-सेना', 8 उपाध्यक्ष, 4 महामंत्री, 8 प्रदेश मंत्री, सेनापति भी तय | Hari Bhoomi". 30 September 2020.
- ↑ "About – Narayan Chandel". பார்க்கப்பட்ட நாள் 14 March 2019.
- ↑ http://election.cg.nic.in/trmsacelection2018/resultacelection.aspx[தொடர்பிழந்த இணைப்பு]