நார்பெர்கைட்டு
நார்பெர்கைட்டு (Norbergite) என்பது Mg3(SiO4)(F,OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இயுமைட்டு குழுவின் உறுப்பினரான இச்சேர்மம் நெசோசிலிக்கேட்டு வகை கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது.
நார்பெர்கைட்டு Norbergite | |
---|---|
பர்மாவில் கிடைத்த கால்சைட்டு மீது நார்பெர்கைட்டு படிகம் (அளவு: 4.2 x 3.3 x 2.3 cm) | |
பொதுவானாவை | |
வகை | நெசோசிலிக்கேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Mg3(SiO4)(F,OH)2 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 202.00 கி/மோல் |
நிறம் | பழுப்பு, மஞ்சள், மஞ்சள்-ஆரஞ்சு, ஆரஞ்சு-பழுப்பு, ஊதா நிறத்துடன் இளஞ்சிவப்பு, வெள்ளை |
படிக இயல்பு | சிறுமணி, மேசைபோல் தட்டையான |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
முறிவு | சமமற்றது முதல் சங்குருவம் வரை |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 6–6.5 |
மிளிர்வு | பளபளப்பு முதல் பிசின் வரை |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும், ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 3.177 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.563 nβ = 1.567 nγ = 1.590 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.027 |
பலதிசை வண்ணப்படிகமை | பல்வண்ணப் படிகம்: X = வெளிர் மஞ்சள்; Y = வெளிர் மஞ்சள்; Z = நிறமற்றது |
2V கோணம் | 44 – 50° |
பிற சிறப்பியல்புகள் | புற ஊதா ஒளியில் மஞ்சள் நிறமாக ஒளிரலாம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் நார்போரைட்டு கனிமத்தை Nrb[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
முதன்முதலில் 1926 ஆம் ஆண்டில் சுவீடனில் உள்ள வாசுட்மேன்லாந்து மாகாணத்தில் உள்ள நார்பெர்க்கு நகராட்சியில் அமைந்துள்ள ஆசுடன்மோசு இரும்புச் சுரங்கத்தில் தோன்றியதாக விவரிக்கப்பட்டது. அதனாலேயே கனிமத்திற்கு நார்பெர்க்கைட்டு என்றும் பெயரிடப்பட்டது.[1][2][5] புளூட்டோனிக் பாறைகள் அல்லது புளோரினை வழங்கும் பெக்மாடைட்டு பாறைகளில் ஊடுருவிய கார்பனேட் பாறைகளில் உள்ள தொடர்பு உருமாற்ற மண்டலங்களில் நார்பெர்கைட்டு தோன்றுகிறது. தோலமைட்டு, கால்சைட்டு, திரெமோலைட்டு, கிராசுலார், வொல்லசுட்டோனைட்டு, பார்சுடரைட்டு, மாண்டிசெல்லைட்டு, கசுபிடின், புளோபோரைட்டு, உலுத்விகைட்டு, புளோரைட்டு மற்றும் புளோகோபைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Norbergite data on Webmineral
- ↑ 2.0 2.1 Norbergite on Mindat.org
- ↑ 3.0 3.1 Norbergite in the Handbook of Mineralogy
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "Norbergite". merriam-webster.com. Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 15 September 2013.