நாலம்பலம் என்பது கேரள மாநிலத்தில் உள்ள நான்கு கோயில்களைக் குறிக்கும் சொல். இராமர், பரதன், இலட்சுமணன் மற்றும் சத்துருக்கனன் ஆகிய நான்கு சகோதரர்களுக்கும் கேரளத்தில் தனித் தனிக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் ஒட்டு மொத்தமாக நாலம்பலம் (நான்கு+அம்பலம், அம்பலம்=கோயில்) என்று அழைக்கப்படுகின்றன.

நாலம்பல யாத்திரை

தொகு
 
108 திவ்ய தேசங்களில் இடம் பெற்றுள்ள மூழிகுளம் சத்துருக்கனன் கோயில்

புனித யாத்திரையாக இந்த நான்கு கோயில்களுக்கும் செல்வது நாலம்பல யாத்திரை என்றழைக்கப்படுகிறது.

திருப்பிரையாரில் உள்ள இராமர் கோயிலில் தொடங்கி பாயம்மல் என்ற இடத்தில் உள்ள சத்துருக்கனன் கோயிலில் ஒரே நாளில் முடிவடையும் வகையில் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மலையாள நாட்காட்டியின் படி கர்க்கிடக மாதம் இந்த நான்கு இராம சகோதர கோயில்களுக்கும் செல்வது வெகுச் சிறப்பானது என நம்பப்படுகிறது.[1]

இராமர் கோயில் திருப்பிரையாரிலும், பரதன் கோயில் இரிஞ்சாலக்குடாவிலும், இலட்சுமணன் கோயில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூழிகுளத்திலும், சத்துருக்கனன் கோயில் பாயம்மல் என்ற இடத்திலும் அமைந்துள்ளன.

திருப்பிரையார் குருவாயூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், இரிஞ்சாலக்குடா திருச்சூரில் இருந்து 22 கி.மீ. தொலைவிலும், மூழிகுளம் திருச்சூரில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும் பாயம்மல் என்ற இடம் இரிஞ்சாலக்குடாவில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

மூழிகுளத்தில் உள்ள சத்துருக்கனன் கோயில், நாலாயாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இடம் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "நாலம்பல தரிசனம்". Archived from the original on 2012-11-09. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாலம்பலம்&oldid=3560584" இலிருந்து மீள்விக்கப்பட்டது