நாவலடியான் கோயில், மோகனூர்
நாவலடியான் கோவில் என்பது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் மோகனூரில் உள்ள கருப்புசாமி கோயிலாகும். நாவல் மரத்தின் அடியில் கருப்பு சாமி காட்சியளித்தால் நவலடியான் என்று பெயர் பெற்றார்.[1] இரு வெண்குதிரை வாகனங்கள் கோயிலின் முன்புறம் அமைந்துள்ளன.
கருப்பு சாமிக்கு பக்தர்கள் மனு கொடுக்கும் வழக்கமும் இக்கோயிலில் உள்ளது.[2] இங்கிருக்கும் இறைவனின் பெயர் “கருப்பசுவாமி” அன்னையின் பெயர் “செல்லாண்டியம்மன்”. மோகனூர் என்பது வேத எழுத்துக்கள். கொங்கு வெள்ளாள கவுண்டர்களில் மணியன், கண்ணந்தை ஆகிய கூட்டத்தவர்களுக்கு குலதெய்வம் ஆகும்.
வரலாறு
தொகுமுற்காலத்தில் இக்கோவில் இருந்த வழியாக வணிகர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர். அப்படி ஒருமுறை ஒரு வணிகர்கள் குழு இப்பகுதி வழியாக பயணித்த போது இருள் சூழ்ந்து விட்டதால் இங்குள்ள நாவல் மரத்தின் அடியில் தங்களுடன் கொண்டு வந்திருந்த ஒரு கல்லை வைத்துவிட்டு தூங்கிவிட்டனர்.
மறுநாள் காலையில் எழுந்த வணிகர்கள் அக்கல்லை எடுக்க முயன்ற போது அதை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. பல வாறு முயன்றும் அக்கல்லை நகர்த்த முடியாத போது அங்கிருந்த ஒரு பக்தரின் உடலில் இறங்கிய கருப்பசுவாமி, தான் இந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும், அந்த கல் இருக்கும் பகுதியை சுற்றி ஒரு கோவிலை எழுப்புமாறு கூறியதாகவும், அதன்படியே அவரது பக்தர்கள் கோவிலை கட்டியதாகவும் தல புராணம் கூறுகிறது. நாவல் மரத்திற்கடியில் கோவில் கொண்டதால் “நாவலடியான்” என்ற பெயரும் இந்த இறைவனுக்கு உண்டு.
விளக்கம்
தொகுபட்டமரம் என்று அழைக்கப்படும் சுவாமிக்கு பின் ஒரு உலர் மரம் உள்ளது, (அதாவது மரம் வறண்டது என்று பொருள்). வடக்கில் படையெடுப்பதற்கு முன்னர் சேர மன்னர் செங்குதுவன் இங்கு பூஜையை நடத்தினார். [சான்று தேவை] செல்லாண்டியம்மன் சன்னதி மிகவும் பிரபலமாக உள்ளது.
பிரார்த்தனை
தொகுபிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க இக்கோவில்பகுதியில் இருக்கம் “மூன்று வேல்களில் மூன்று எலுமிச்சை பழத்தை: சொருகி வழிபடுகின்றனர். தெரிந்தே பல தவறுகளையும், பாவங்களையும் செய்தவர்கள், கருப்பசுவாமி தங்களை மன்னித்தருள இதே வேண்டுதல் முறையை கடைபிடிக்கின்றனர். இந்த வேல்களுக்கு அருகில் இருக்கும் கருப்பசுவாமியின் குதிரை சிலை இவை எல்லாவற்றையும் பார்க்கும் இறைவனின் சாட்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. பக்தர்களால் மிக முக்கியமானதாக கருதப்படும் நாராயண பூஜை சத்திய பூஜை. இக்கோவிலில் உள்ள அரச மரத்திற்கு சிலர் செருப்பையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். மற்றும் தங்கள் வேண்டுதல்களை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி இங்கிருக்கும் நாவல் மரத்தில் கட்டிவைக்கின்றனர். தங்களின் காணிக்கையாக இக்கோவிலுக்கு சற்று தள்ளி இருக்கும் பகுதியில் ஆடு கோழி போன்றவற்றை பலியிட்டு, அவற்றை சமைத்து கருப்பசுவாமிக்கு படையல் வைக்கின்றனர்.
திருவிழாக்கள்
தொகுபங்குனி மாதத்தின் போது (மார்ச்-ஏப்ரல்) மாரியம்மன் திருவிழா 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. காளிம்மன் திருவிழா பின்னர் ஏப்ரல்-மே மாதத்தில் தொடர்ந்து, 8 நாட்கள் நீடிக்கிறது.
கோவில் அமைவிடம்
தொகுஸ்ரீ நாவலடி கருப்பசுவாமி கோவில் நாமக்கல் மாவட்டத்தில், மோகனூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இவ்வூருக்கு பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகளும் இருக்கின்றன.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
தொகுவாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை.
ஆதாரங்கள்
தொகு- ↑ "நாவலடி கருப்பண்ண சுவாமி கோவில் தகவல்". தெய்வீகம்.
- ↑ https://archive.today/20130628063248/shockan.blogspot.in/2010/05/blog-post_150.html சொல்லக்கூடாத ரகசியம்