நானோமீட்டர்

(நா.மீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நானோமீட்டர் (Nanometer; SI குறியீடு: nm) என்பது மெட்ரிக் முறையில் ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கும் ( 0.000000001 m) நீள அலகு ஆகும்.[1][2][3]

நானோமீட்டர் அளவில் குறிப்பிடப்படும் சில பொருட்கள்:

  • 1 நானோ மீட்டர் - சுக்ரோசு என்னும் இனிப்பு வேதிப் பொருள் மூலக்கூறின் பருமன்.
  • 1.1 நானோமீட்டர் (நா.மீ.) - ஒற்றைச் சுவர் கார்பன் நானோ குழலின் உள்விட்டம்.
  • 2 நா.மீ. - டி.என்.ஏஎன்னும் உயிர் மரபிழையின் சுருளை விட்டம்.
  • 3 நா.மீ. - கணினிகளில் உள்ள சுழலும் வன்தட்டு அதன் காந்த உணர்முகத்தில் இருந்து விலகி சுழலும் இடைவெளி.
  • 20-450 நா.மீ. - பல தீநுண்மங்களின் பருமை.
  • <100 நா.மீ. - புகையில் உள்ள துகள்களில் 90% துகள்களின் அளவு.

மேற்கோள்கள்

தொகு
  1. Svedberg, The; Nichols, J. Burton (1923). "Determination of the size and distribution of size of particle by centrifugal methods". Journal of the American Chemical Society 45 (12): 2910–2917. doi:10.1021/ja01665a016. 
  2. Svedberg, The; Rinde, Herman (1924). "The ulta-centrifuge, a new instrument for the determination of size and distribution of size of particle in amicroscopic colloids". Journal of the American Chemical Society 46 (12): 2677–2693. doi:10.1021/ja01677a011. 
  3. Terzaghi, Karl (1925). Erdbaumechanik auf bodenphysikalischer Grundlage. Vienna: Franz Deuticke. p. 32.

வரலாறு

தொகு

முன்பு, நானோமீட்டர் என்பது மில்லிமைக்கிரோமீட்டர் என்றே வழங்கப்பெற்றது. இது, ஒரு மைக்ரானின்(மைக்கிரோமீட்டர்) ஆயிரத்தில் ஒரு பங்கை குறிப்பதனால், இதனை மில்லிமைக்ரான் என்றும் அழைத்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோமீட்டர்&oldid=4100075" இலிருந்து மீள்விக்கப்பட்டது