நா. நாச்சிமுத்து

நா. நாச்சிமுத்து (N. Nachimuthu ) (2 சூலை 1926 - 21 மே 2016) ஒரு தமிழ்நாட்டு அரசியலர், வேளாண் ஆர்வலர் மற்றும் கல்வியாளர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த இவர், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கான தமிழ்நாட்டு சட்டப் பேரவை உறுப்பினராக 1967 முதல் 1976 வரை பணியாற்றினார்.

தொடக்க வாழ்க்கை

தொகு

இன்றைய திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் உள்ள தேவத்தூரில் 2 சூலை 1926 அன்று பழனியம்மாள்-நாச்சிமுத்து இணையருக்கு மகனாகப் பிறந்தார் நாச்சிமுத்து.

கல்வி

தொகு

பள்ளிக் கல்வியினை பழநி நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளியிலும் பயின்றார்

அரசியல்

தொகு

இவர் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 ஒட்டன்சத்திரம் திமுக 40,845 58.99[2]
1967 ஒட்டன்சத்திரம் திமுக 39,817 55.55[3]

மறைவு

தொகு

முதுமை காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கித் தன் வளர்ப்பு மகன் வள்ளுவன் வீட்டில் வாழ்ந்துவந்த நாச்சிமுத்து, 21 மே 2016 அன்று காலமானார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. Madras: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 237.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  4. Akilan, Mayura (2016-05-21). "ஒட்டன்சத்திரம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ நாச்சிமுத்து காலமானார்".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._நாச்சிமுத்து&oldid=4119193" இலிருந்து மீள்விக்கப்பட்டது