நா மே க ரெ வி மகளிர் கல்லூரி
நா.மே.க.ரெ.வி மகளிர் கல்லூரி(NMKRV College for Women), என்பது கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஜெயநகரில் 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு மகளிர் பொது பட்டக் கல்லூரியாகும். பெங்களூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள [1] இக்கல்லூரியில் கலை, அறிவியல் மற்றும் வணிகப்பிரிவுகளில்பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. சமீபத்திலிருந்து முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.
வகை | தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1973 |
சார்பு | பெங்களூரு பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
தலைவர் | எம்.பி ஷியாம் |
முதல்வர் | முனைவர் சிநேகலதா ஜி நாடிகர் |
அமைவிடம் | 45/1, 22வது கிராஸ், ஜெயநகர், III பிளாக் , , , 560011 , |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | ஆங்கிலம், கன்னடம், இந்தி |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
திருமதி நாகரத்தினம்மா மேதா கஸ்தூரிரங்க ரெட்டியின் நினைவாகவே இக்கல்லூரிக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய வித்யாலயா கல்வி நிறுவனம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படும் இக்கல்லூரி, 2005 ஆம் ஆண்டில் தன்னாட்சி அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
துறைகள்
தொகுஅறிவியல் பிரிவு
தொகு- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- மின்னணுவியல்
- உயிரி தொழில்நுட்பவியல்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகப்பிரிவு
தொகு- கன்னடம்
- ஆங்கிலம்
- வரலாறு
- அரசியல் அறிவியல்
- சமூகவியல்
- பொருளாதாரம்
- உளவியல்
- இதழியல்
- வியாபார நிர்வாகம்
- வர்த்தகம்
அங்கீகாரம்
தொகுபல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் மதிப்பீடு செய்யப்பட்டு தரமளிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவால் இக்கல்லூரியானது , "சிறப்பு சாத்தியக்கூறுள்ள கல்லூரி" என விருதளிக்கப்பட்டுள்ளது.