நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

'நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு (ஆங்கிலம்: History As it Happened) என்ற புத்தகம் 1949 முதல் 1998 உள்ள வரலாற்று கட்டுரைகளின் தொகுப்பாகும். இதனை ஆங்கிலத்தில் தொகுத்தவர்கள் பாபி எஸ். ஓர்டிஸ் மற்றும் திலக் டி.குப்தா ஆவர். இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் ச. சுப்பாராவ். 'மன்த்லி ரெவ்யூ' அமெரிக்காவிலிருந்து கடந்து 60 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் ஒரு உலக புகழ்பெற்ற இடதுசாரி திங்களிதழ். காரல் மார்க்சு ஆசிரியராகப் பணியற்றிய ரெய்னிச் ஜெய்டுங், லெலின் பதிப்பித்த இஸ்க்ரா, புகாரின் ஆசிரியராய் இருந்து வெளிவந்த பிராவ்தா, இங்கிலாந்தில் இருந்து வெளிவந்த நியூ லேபிட் ரெவ்யூ, ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அக்காஹட்டா போல சர்வதேச இடதுசாரி இயக்க வரலாற்றில் தவிர்க்கவியலாத பெயர் 'மன்த்லி ரெவ்யூ'. இதில் 1949-1998 ஆண்டுகளில் வெளிவந்த முக்கியமானக் கட்டுரைகளைத் தொகுத்து 'ஹிஸ்டரி ஆஸ் இட் ஹேப்பான்ட்' (History As it Happened) என்ற பெயரில் மன்த்லி ரெவ்யூ பதிப்பகமே ஆம் ஆண்டு வெளியிட்டது. இது ஐன்ஸ்டீன், சே குவேரா, பால். எம். ஸ்வீஸி, பால் பரான், லியூ ஹீபர்மன் போன்ற ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள் கொண்ட தொகுப்பு; வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்தபோதே எழுதப்பட்டு இன்றைக்கும் இடதுசாரிகள் அனைவரும் வாசிக்கும் அவசியம் உள்ள தொகுப்பு.

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு
நூலாசிரியர்பாபி எஸ்.ஒர்டிஸ், திலக்.டி.குப்தா (தமிழில் :ச.சுப்பாராவ்)
நாடுவட அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பொருண்மைவரலாறு,
வெளியிடப்பட்டது1999 (மன்த்லி ரெவியூ பிரஸ்) (தமிழில்: பாரதி புத்தகாலயம்)

வெளி இணைப்புகள்

தொகு