நிகாத் சையது கான்

நிகாத் சையது கான் (Nighat Said Khan) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணிய ஆர்வலர் ஆவார். ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளராகவும் இவர் இயங்கி வருகிறார். பயன்பாட்டு சமூக-பொருளாதார ஆராய்ச்சி ஆதார மையத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனராகவும், பெண்கள் செயல் மன்றத்தின் நிறுவன உறுப்பினராகவும் உள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

1960 ஆம் ஆன்டுகளில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புக்காக நியூயார்க் நகரத்திற்குச் செல்வதற்கு முன் நிகாத் கான் தனது குழந்தைப் பருவத்தை பாக்கித்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வாழ்ந்தார். தனது உயர் நிலைப் பள்ளி படிப்புகளுக்காக இலண்டனுக்குச் சென்றார். பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், இவர் வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம் மற்றும் பெண்கள் உரிமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1974 ஆம் ஆண்டில் நிகாத் பாக்கித்தானுக்குத் திரும்பினார். அதன்பிறகு நீண்ட காலத்திற்கு அங்கு அதிக நேரம் செலவிட்டார். மீண்டும் இங்கு திரும்பியதும், இவர் கிழக்கு பாக்கித்தானில் பாக்கித்தான் இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சனநாயக பெண்கள் சங்கத்தில் ஈடுபட்டார்.

2017 ஆம் ஆண்டில் எரால்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தான் வளர்ந்து வரும் போது தனது தந்தை பாக்கித்தான் இராணுவத்தில் இருந்தார் என்பதை வெளிப்படுத்தினார். ஆனால் இவரது தந்தை ஓர் இராணுவ சட்ட நிர்வாகியாக இருந்த அதே நேரத்தில் அயூப் கானுக்கு எதிரான மாணவர் இயக்கத்தில் சேருவதைத் தடுக்கவில்லை. . [1] மகளிர் உரிமை ஆர்வலர் தாகிரா மசார் அலி [2] மற்றும் அவரது கணவர் மயர் அலி கான் ஆகியோர் ஆரம்பகாலத்தில் செல்வாக்குடையவர்கள் ஆக இருந்தார்கள் என்று இவர் மேற்கோள் காட்டுகிறார்.

அரசியல் செயல்பாடு

தொகு

நிகாத் அநேகமாக பெண்கள் செயல் மன்றத்தின் நிறுவன உறுப்பினராக நன்கு அறியப்பட்டவராக இருந்தார். பாக்கித்தானில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 12, 1983 அன்று லாகூரில் அப்போதைய அதிபர் சியாவுல் அக்கின் சாட்சிய சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் நிகாத்தும் ஓர் அங்கமாக இருந்தார். பெண்களின் சாட்சியை ஆண்களின் சாட்சியமாக பாதியாக குறைக்கும் நோக்கத்தில் அப்பொது சியா உல் அக் இருந்தார்.

பொருளாதார-சமூக-அரசியல் வரிசையில் பெண்களின் பங்கை மையமாகக் கொண்டு, இடதுசாரி தொடர்பான பிரச்சினைகளில் நிகாத் வெளிப்படையாக பேசினார். வேலை மற்றும் செயல்பாட்டின் மூலம் பாலியல், பெண் ஆசை மற்றும் குடும்பத்தின் பாரம்பரிய வடிவங்களை நிகாத் விமர்சித்தார். எரால்டு பத்திரிகைக்கான ஒரு நேர்காணலில் அவர் கூறினார்: "நான் பாலியல் மற்றும் பெண்களின் பாலியல் கட்டுப்பாடு பற்றிய பிரச்சனையை மற்ற பெண் உரிமை அமைப்புகளுடன் கொண்டு வந்தேன். அது பெண்களின் நடமாட்டமாக இருந்தாலும் அல்லது அவர்களின் திருமணமாக இருந்தாலும் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. பெண்களின் உடல்கள் அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துகின்றன. மதங்கள், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மிக முக்கியமாக பரம்பரையை நிலைநிறுத்துவது போன்றவற்றை பெண்கள்தான் சுமக்கிறார்கள். அவர்களின் பாலியல் 'தூய்மை' குடும்பம் மற்றும் சமூகத்தின் இரத்தக் குழாயின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது. " [3]

ஆராய்ச்சி மற்றும் வேலை

தொகு

நிகாத் பேராசிரியர் எரிக் சைப்ரியனுடன் லாகூரில் உள்ள சா உசைன் கல்லூரியிலும், பின்னர் 1970 ஆம் ஆண்டுகளில் இசுலாமாபாத்தில் உள்ள காயித்-இ-ஆசம் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தார். இவரது இடதுசாரி அரசியல் நம்பிக்கையின் காரணமாக பிந்தைய நிலையில் இருந்து இவர் நீக்கப்பட்டார்.

1983 ஆம் ஆண்டில் பயன்பாட்டு சமூக-பொருளாதார ஆராய்ச்சி மையத்தை நிகாத் நிறுவினார் இது பாக்கித்தானின் முதல் பெண்ணிய வெளியீட்டு நிறுவனம் ஆகும் [4] மற்றும் "சமூக மாற்றத்தை நோக்கி வேலை செய்யும் ஒரு பலதரப்பட்ட, பல் பரிமாணக் குழு" என்றும் இந்நிறுவனம் அடையாளப்படுத்துகிறது. [5] லாகூரில் உள்ள மகளிர் ஆய்வுக் கழகத்தின் ஆய்வின் தலைவியாக இருந்தார். இது தெற்காசிய முதுகலை கற்பித்தல் மற்றும் பயிற்சித் திட்டமாகும்.

நிகாட் பல வெளியீட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தார், பெரும்பாலும் மற்ற உள்ளூர் பெண்ணியவாதிகளுடன் ஒத்துழைத்து செயற்பட்டார். "பெண்ணியம் மற்றும் தெற்காசியாவில் அதன் தொடர்பு பற்றிய சில கேள்விகள்" நூலுக்காக கம்லா பாசின் உடன் சேர்ந்து பணியாற்ரினார். "பிரச்சினைகளை வெளிப்படுத்துதல்" : பாக்கித்தானிய பெண்களின் சமூக, அரசியல் மற்றும் கருத்தியல் பிரச்சினைகள் பற்றிய முன்னோக்குகள் "ஆய்வுக்காக ஆஃபியா செர்பானோ சியாவுடன் இணைந்து பணியாற்றினார். "பெண்கள் இயக்கம் மறுபரிசீலனை செய்யப்பட்டது, எதிர்காலத்திற்கான அக்கறை கொண்ட பகுதிகள்" உள்ளிட்ட அத்தியாயங்களை இவர் வழங்கியுள்ளார். "அடையாளம், வன்முறை மற்றும் பெண்கள்: 1947 இந்தியப் பிரிவினை பற்றிய ஒரு பிரதிபலிப்பு ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jahan, Tanveer (8 March 2016). "The sole voice: Women's rights activist, Nighat Said Khan" (in en). Herald Magazine. https://herald.dawn.com/news/1153358. 
  2. Correspondent, Our Special (17 May 2015). "Tahira Mazhar Ali – an unflinching Leftist" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1182474. 
  3. Jahan, Tanveer (8 March 2016). "The sole voice: Women's rights activist, Nighat Said Khan" (in en). Herald Magazine. https://herald.dawn.com/news/1153358. 
  4. Khan, Ayesha. "The Linkages Between Scholarship and Advocacy: From a feminist analysis of research on the Karachi conflict" (PDF). Sustainable Development Policy Institute (SDPI).
  5. "Home". ASR Resource Center. Archived from the original on 2021-04-18. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகாத்_சையது_கான்&oldid=3732968" இலிருந்து மீள்விக்கப்பட்டது